சுருதி சௌத்ரி

இந்திய அரசியல்வாதி

சுருதி சௌத்ரி (Shruti Choudhry) (பிறப்பு 3 அக்டோபர் 1975) என்பவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.

சுருதி சௌத்ரி
மக்களவை உறுப்பினர்
பதவியில்
2009 – 2014
முன்னையவர்குல்தீப் பிஷோனி[1]
பின்னவர்தரம்பீர்
தொகுதிபிவானி மகேந்திரகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 அக்டோபர் 1975 (1975-10-03) (அகவை 48)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்அருனாப் சௌத்ரி
வாழிடம்பிவானி[2]
As of 2 சூன, 2009

ஆரம்பகால வாழ்க்கை தொகு

சுருதி சௌத்ரி 3 அக்டோபர் 1975 அன்று புதுதில்லியில் பிறந்தார்.[3] இவரது பெற்றோர் செளத்ரி சுரேந்தர் சிங், கிரண் செளவுத்ரி ஆகிய இருவரும் அரியானா மாநில அரசாங்கத்தில் அமைச்சர்களாக பணியாற்றினர். இவரது தந்தைவழி தாத்தா பன்சிலால் அரியானாவின் முன்னாள் முதலமைச்சராக இருந்தார். மேலும் இவரது குடும்பம் அரியானாவின் முக்கிய அரசியல் குடும்பங்களில் ஒன்றாகும்.[2][4]

சௌத்ரியின் ஆரம்பக் கல்வி கான்வென்ட் ஆஃப் ஜீசஸ் & மேரி பள்ளியிலும், தில்லி ஆர் கே புரம் பொது பள்ளியிலும் இருந்தது. இதன் பிறகு இவர் இங்கிலாந்தில் உள்ள ஆக்சுபோர்டில் படித்தார். இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பின்னர், ஆக்ராவிலுள்ள பி. ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். மார்ச் 7, 2003 அன்று, அருணாப் செளத்ரி என்ற வழக்கறிஞரைத் திருமணம் செய்து கொண்டார்.[2][4]

அரசியல் தொகு

முதலில் ஒரு வழக்கறிஞராகப் பயிற்சி பெற்ற சௌத்ரி 2005இல் தனது தந்தை இறந்ததையடுத்து அரசியலுக்கு திரும்பினார். 2009 ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தலில் பிவானி-மகேந்திரகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இந்திய தேசிய காங்கிரசு கட்சியால் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். முக்கியமாக இப்பகுதியில் இவரது குடும்பத்தினருக்கு இருந்த நல்லெண்ணத்தின் விளைவாக,[5] தனது போட்டி வேட்பாளரான இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் அஜய் சிங் சௌதாலாவை 55,097 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவரது தாத்தா முன்பு இந்தத் தொகுதியில் மூன்று முறையும் இவருடைய தந்தை இரண்டு முறையும் வெற்றிப் பெற்றிருந்தனர்.[6] 2009 முதல் பெண்கள் விவசாயம் மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான மக்களவை குழுக்களின் உறுப்பினராக சௌத்ரி பணியாற்றினார்.[7] ஆனால் 2014ல் நடந்த தேர்தலில் இவரால் வெற்றி பெற முடியவில்லை.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Saini, Ravinder (19 March 2014). "Battle lines drawn for multi-cornered contest". The Tribune. http://www.tribuneindia.com/2014/20140320/vote.htm#1. பார்த்த நாள்: 4 May 2014. 
  2. 2.0 2.1 2.2 "Detailed Profile: Smt. Shruti Choudhry". India: National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 3 May 2014.
  3. name="bio"
  4. 4.0 4.1 Chaudhury, Tashneem (4 March 2011). "Heir conditioned". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 3 May 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140503192125/http://www.hindustantimes.com/news-feed/entertainment/heir-conditioned/article1-669461.aspx. பார்த்த நாள்: 3 May 2014. 
  5. name="ht"
  6. name="tribune"
  7. name="bio"

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருதி_சௌத்ரி&oldid=3890474" இலிருந்து மீள்விக்கப்பட்டது