சுருளிமலை சுருளிவேலப்பர் கோயில்
சுருளிவேலப்பர் கோயில் என்பது தேனி மாவட்டத்திலுள்ள சுருளிமலையில் அமைந்துள்ள கோயிலாகும். [1] இதனை நெடுவேள்குன்றம் என்றும் அழைக்கின்றனர். இத்தலத்தின் மூலவரை வேலப்பர் என்று அழைக்கின்றனர். இங்குள்ள தீர்த்தமாக சுரபிதீர்த்தம் கருதப்படுகிறது. இது சுருளி அருவியாகும்.
சுருளிமலை சுருளிவேலப்பர் திருக்கோயில், தேனி | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தேனி மாவட்டம் |
அமைவு: | சுருளிமலை, தேனி |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | [சுருளிவேலப்பர்]], முருகன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தென் இந்தியா, கோயில்கள் |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 1000 ஆண்டுகளுக்கு முன் |
இக்கோயிலின் அருகே விபூதி குகை, கைலாய குகை மற்றும் கன்னிமார் குகை போன்றவை உள்ளன. இந்தக் கோயிலின் விபூதி குகையில் ஈர மண் விபூதியாக மாறுகிறது என்பது வியப்பிற்குறிய செய்தியாகும்.
இக்கோயிலின் கருவறையில் முருகன், சிவன், திருமால், விநாயகர் ஆகியோர் உள்ளனர். இக்கருவறை குகையாகும்.
தலவரலாறு
தொகுஇத்தலத்தின் மூலவரான சுருளிவேலப்பர் குழந்தையில்லாதவருக்கு இறுதிக் கடன்களை செய்தார். அதனால் இறுதி காலத்தில் குழந்தை இல்லாதவர்கள் மூலவர் சுருளிவேலப்பரை தங்கள் குழந்தையாக எண்ணுகின்றனர்.
தலசிறப்பு
தொகுஅகத்தியருக்கு திருமணக் கோலத்தில் சிவபெருமான் காட்சியளித்த தலம்.
விழாக்கள்
தொகு- ஆடிப்பெருக்கு
- ஆடி அமாவாசை
- தை அமாவாசை
- சிவராத்திரி
- பங்குனி உத்திரம்
- வைகுண்ட ஏகாதசி
- சித்திரை திருநாள்