சுரேசு சத்யா

இந்தியத் தடகள வீரர்.

சுரேசு சத்யா (Suresh Sathya) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீரராவார். 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி இவர் பிறந்தார். 4 × 100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பாக பன்னாட்டுப் போட்டிகளில் இவர் பங்கேற்றுள்ளார். சத்யாவை உள்ளடக்கிய அணி 4 × 100 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய தேசிய சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சுரேசு சத்யா
தனிநபர் தகவல்
பிறந்த பெயர்சுரேசு சத்யா
Suresh Sathya
தேசியம்இந்தியர்
பிறப்பு7 செப்டம்பர் 1987 (1987-09-07) (அகவை 37)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்

2010 ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற 19 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற 4 x 100 மீட்டர் தொடரோட்ட அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த அணியில் சத்யாவும் உறுப்பினராக இருந்தார். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இப்போட்டியில் தேசிய சாதனையையும் படைத்தது.[1]

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சத்யா 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஆறாவது இடத்தையும், 4 × 100 மீட்டர் தொடரோட்டப் போட்டியில் நான்காவது இடத்தையும் பிடித்தார். ஆனால் ஊக்க மருந்து சோதனையில் சத்யா தோல்வியுற்ற காரணத்தால் இரண்டு முடிவுகளும் இரத்து செய்யப்பட்டன. ஊக்கமருந்து எதிர்ப்பு மீறல் காரணமாக சத்யா இரண்டு ஆண்டுகள் போட்டிகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். [2]

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேசு_சத்யா&oldid=3318554" இலிருந்து மீள்விக்கப்பட்டது