சுரையா தியாப்ஜி

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பெண்

சுரையா தியாப்ஜி (Surayya Tyabji - 1919) பிரித்தானியாவின் இந்தியாவின், ஐதராபாத்தில் (ஆந்திரா, இப்போது தெலுங்கானாவின் தலைநகரம்) 1919 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிரபல வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளரும், இந்திய தேசிய காங்கிரசின் முஸ்லிம் தலைவரும் ஆன பத்ருதின் தியாப்ஜியின் மனைவியாவார்.[1][2]

சுரையா தியாப்ஜி ஒரு புகழ்பெற்ற கலைஞராக இருந்தார், அவர் வாழ்க்கை மற்றும் சமுதாயத்தைப் பற்றிய வழக்கத்திற்கு மாறான மற்றும் முற்போக்கான கண்ணோட்டத்திற்காக பிரபலமாக அறியப்பட்டார். இவரது கணவர் அரசியலமைப்பு சபையின் கீழ் பல்வேறு குழுக்களில் உறுப்பினராக இருந்ததால், இவரும் அவற்றில் பலகுழுக்களில் முக்கிய பங்கு வகித்துள்ளார். பல கலைகளில் ஆர்வமுள்ள அவர் ஓவியங்கள் வரைவதில் திறமையானவர், மேலும் சமைப்பது, தையல், சவாரி செய்தல், நீச்சல் மற்றும் குடும்பத்தின் முதலீடுகளையும் நிர்வகித்தார்.[3]

தேசியக் கொடி உருவான வரலாறு

தொகு

இந்தியா சுதந்திரம் உறுதியான காலகட்டத்தில், ‘சுதந்திர இந்தியாவின்’ இந்திய தேசியக் கொடியை அறிமுகப்படுத்த அப்பொழுதைய காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டனர். அந்தச் சமயம் இருந்த காங்கிரஸ் கொடியில், இன்றைய அசோக சக்கரத்துக்குப் பதிலாக காந்தியின் ராட்டை சின்னம் இருந்தது. அப்போது பிரதமரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஐ. சி. எஸ் அதிகாரி பத்ருதின் தியாப்ஜி, ஒரு கட்சியின் கொடி தேசிய கொடியாக வேண்டாமென்று ஆலோசனை கூற, பிரதமர் நேருவும் அதை ஏற்றுக்கொண்டார். அதனால், 17 சூலை, 1947 அன்று காந்தியின் இராட்டை சின்னத்திற்கு பதில் அசோகச் சக்கரத்தை வைத்து கொடியை பத்ருதின் தியாப்ஜியின் மனைவி சுரையா தியாப்ஜி வடிவமைத்து, தயாரித்து நேருவிடம் வழங்கினார்.[4] [5][6]

இதணையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. வரலாற்றாசிரியர் பட்டாபி சீதாராமையா- The History of Indian National Congress
  2. https://books.google.co.in/books?id=b-U9AAAAMAAJ&dq=the+last+days+of+the+raj+trevor+royle+surayya+tyabji&focus=searchwithinvolume&q=Ashoka The Last Days of The Raj - Trevor Royle, an English historian
  3. https://feminisminindia.com/2018/12/10/surayya-tyabji-designed-national-flag/ சுரையா தியாப்ஜி: எங்கள் தேசியக் கொடியை வடிவமைத்த பெண் |https://feminisminindia.com/
  4. https://www.vikatan.com/literature/politics/76267-behind-the-story-of-suraiya-who-designed-the-national-flag இந்தியத் தேசியக் கொடியை வடிவமைத்த சுரையா... மறைக்கப்பட்ட உண்மைகள் |https://www.vikatan.com/
  5. The Last Days of The Raj - Trevor Royle, an English historian
  6. https://www.indiatoday.in/fact-check/story/fact-check-did-a-muslim-woman-design-indian-national-flag-1317892-2018-08-18 கேப்டன் லிங்கையா பாண்டுரங்க ரெட்டியின் வரலாற்று ஆய்வுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரையா_தியாப்ஜி&oldid=3845092" இலிருந்து மீள்விக்கப்பட்டது