பத்ருதின் தியாப்ஜி

இந்திய ஆட்சிப்பணி அதிகாரி

பத்ருதின் தியாப்ஜி (Badruddin Tayyabji, ICS 1907 - 1995) என்பவர் ஒரு மூத்த இந்திய குடிமையியல் அதிகாரி ஆவார். 1962 ஆம் ஆண்டு முதல் 1965 வரை அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக துணை வேந்தராக பணியாற்றினார். 1948 இல் தூதரக அதிகாரியாக பணியாற்றும் போது, ஜெர்மனியின் பிரசெல்சில் தூதரகம் தொடங்குவதற்கான பணியை மேற்கொண்டார். மேலும் ஜகார்தா, தெகுரான், பான் மற்றும் டோக்கியோவில் இந்தியத் தூதராகவும் பணியாற்றியுள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது தலைவராக இருந்த பத்ருதீன் தியாப்ஜியின் பேரனாவார்.

பிறப்பும் குடும்பமும் தொகு

பத்ருதின் தியாப்ஜி 1907 ஆம் ஆண்டு பம்பாயில் பிறந்தார். இவரது தந்தை பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய ஃபைஸ் தியாப்ஜி ஆவார். இவரது மனைவி சுரையா தியாப்ஜி ஆவார்,

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் இவரின் மனைவியான சுரையா தியாப்ஜி.[1][2]

இதனையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ருதின்_தியாப்ஜி&oldid=2974975" இலிருந்து மீள்விக்கப்பட்டது