சுலேகா தல்வால்கர்
சுலேகா தல்வால்கர் (Sulekha Talwalkar) இவர் ஓர் மராத்தி திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் நாடக நடிகை ஆவார்.
தொழில்
தொகுமும்பையின் மாதுங்காவின் ராம்நாரைன் ருயா கல்லூரியில் படிக்கும் போது தல்வால்கர் நடிப்பு வாழ்க்கையில் நுழைந்தார். இவர் நாட்யவாலே என்ற நாடகக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். அங்கு இவர் சாட்சியா ஆத் காரட் என்ற தனது முதல் வணிக நாடகத்தில் நடித்தார். இதே பெயரில் ஒரு திரைப்படம் பின்னர் 2004 இல் இதே போன்ற கதை வரிசையில் உருவாக்கப்பட்டது. இவரது முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தேரி பீ சுப் மேரி பீ சுப் என்பதாகும். பின்னர் இவர் அதிகாரி பிரதர்ஸ் போன்ற பல்வேறு இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தார். 1995 ஆம் ஆண்டில், மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கிய மராத்தி திரைப்படமான ஆயில் ஷெபாலியில் ஜாதவ் என்ற ஒரு துணை வேடத்தில் நடித்தார்.
பிரபலமான மராத்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான அவந்திகா மற்றும் அசம்பவ் போன்றவற்றில் தல்வால்கர் பல்வேறு துணை வேடங்களில் நடித்தார். 2007 ஆம் ஆண்டில், மராத்தி இயக்குநர் சந்திரகாந்த் குல்கர்னியின் படத்தில் நடித்தார். இவரது 2008 ஆம் ஆண்டு திரைப்படமான துஸ்யா மஸ்யத் 1998 ஆம் ஆண்டு ஆங்கில திரைப்படமான ஸ்டெப்மாம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. இதில் தல்வால்கர் ஷாஷங் என்பவரின் இரண்டாவது மனைவியாக நடித்திருந்தார். [1] 2009 ஆம் ஆண்டில், டின்ஹிசான்ஜா என்றப் படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். படம் தலைமுறை இடைவெளி மற்றும் ஒருவரின் வயதான பெற்றோரை கவனித்துக்கொள்வது பற்றியாதாக இருந்தது. சந்தீப் குல்கர்னி இவரது கணவராக நடித்தார் . இவரது உறவினர்களாக நடிகர்கள் ரமேஷ் தியோ மற்றும் அஷலதா வப்கோங்கர் ஆகியோர் நடித்திருந்தனர் . [2] இவரது 2012 திரைப்படமான ஷியாம்சே வாட் என்பதில் லீனா என்ற புத்திசாலித்தனமான மனைவியின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் 2012 இல் இவர் மராத்தி நாடகமான மகாசாகரில் சுபோத் பாவே, ஆஷலதா வப்கோங்கர், ஷைலேஷ் தாதர் மற்றும் பல நட்சத்திர நடிகர்களுடன் தோன்றினார். முதலில் ஜெயவந்த் தால்வி எழுதிய இந்த நாடகத்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை நீலம் ஷிர்கே தனது அஸ்மி புரொடக்சன்ஸ் என்ற பதாகையின் கீழ் மறு ஆக்கம் செய்திருந்தார். நீனா குல்கர்னி என்பவர் இயக்கியிருந்தார். விஜய மேத்தா இயக்கியிருந்தார். நடிகர்களில் விக்ரம் கோகலே, உஷா நட்கர்னி, நானா படேகர், மச்சீந்திர கம்ப்லி மற்றும் பாரதி ஆக்ரேக்கர் போன்ற குறிப்பிடத்தக்கவர்கள் அடங்குவர். [3]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுதல்வால்கர் அக்டோபர் 8 ஆம் தேதி சுலேகா தாராதர் என்றப் பெயரில் பிறந்தார். இவரது பெற்றோருக்கு ஒரே குழந்தையாவார். மும்பை இராஜா ஜார்ஜ் பள்ளி மற்றும் ராம்நரைன் ருயா கல்லூரி ஆகியவற்றிலிருந்து கல்வியை முடித்தார். இவர் இந்தியாவின் சுகாதார சங்கத்தின் முக்கிய சங்கிலியான தல்வால்கர்களின் இயக்குநர்களில் ஒருவரான அம்பர் தல்வால்கரை மணந்தார். [4] இவரது மாமியார் ஸ்மிதா தல்வால்கர் ஒரு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளரும் மற்றும் நடிகையுமாவார்.
குறிப்புகள்
தொகு- ↑ Kondke, Daajiba (2 May 2008). "Tuzya Mazyat could have been better". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 22 January 2013.
- ↑ Dingankar, Sunil (21 June 2009). "अरे संस्कार संस्कार!" (in Marathi). Loksatta. Archived from the original on 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 22 January 2013.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - ↑ "वीस वर्षांनंतर 'महासागर' रंगभूमीवर" (in Marathi). Nashik: Lokmat. 6 August 2012. பார்க்கப்பட்ட நாள் 22 January 2013.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "This is how you do it". DNA. 8 October 2005. பார்க்கப்பட்ட நாள் 9 January 2013.