சுழலெண்
ஒரு முழு எண்ணின் இலக்கங்களைச் சுழல் வரிசைமாற்றம் செய்வதால் கிடைக்கும் புது எண்கள், மூல எண்ணின் அடுத்தடுத்த மடங்குகளாக அமையுமானால் அம்முழுஎண் சுழலெண் (cyclic number) எனப்படும்.
எடுத்துக்காட்டு: 142857 ஒரு சுழலெண்:
- 142857 × 1 = 142857
- 142857 × 2 = 285714
- 142857 × 3 = 428571
- 142857 × 4 = 571428
- 142857 × 5 = 714285
- 142857 × 6 = 857142
விளக்கம்
தொகுஒரு எண் சுழலெண்ணாக இருக்கவேண்டுமானல் அதன் தொடர் மடங்குகள் அதன் இலக்கங்களின் சுழல் வரிசைமாற்றங்களாக இருக்க வேண்டும்[1].
எண் 076923 ஒரு சுழலெண் அல்ல. அதன் இலக்கங்களின் சுழல் வரிசைமாற்றங்கள் 076923 இன் மடங்குகளாக உள்ளன, ஆனால் அடுத்தடுத்த வரிசையிலான மடங்குகளாக இல்லை:
- 076923 × 1 = 076923
- 076923 × 3 = 230769
- 076923 × 4 = 307692
- 076923 × 9 = 692307
- 076923 × 10 = 769230
- 076923 × 12 = 923076
முன் சுழிகள் அனுமதிக்கப்படாவிட்டால், பதின்மங்களில் 142857 மட்டுமே சுழலெண்ணாக இருக்கும். முன்சுழிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் சுழலெண்களின் தொடர்வரிசை:
- (106-1) / 7 = 142857 (6 இலக்கங்கள்)
- (1016-1) / 17 = 0588235294117647 (16 இலக்கங்கள்)
- (1018-1) / 19 = 052631578947368421 (18 இலக்கங்கள்)
- (1022-1) / 23 = 0434782608695652173913 (22 இலக்கங்கள்)
- (1028-1) / 29 = 0344827586206896551724137931 (28 இலக்கங்கள்)
- (1046-1) / 47 = 0212765957446808510638297872340425531914893617 (46 இலக்கங்கள்)
- (1058-1) / 59 = 0169491525423728813559322033898305084745762711864406779661 (58 இலக்கங்கள்)
- (1060-1) / 61 = 016393442622950819672131147540983606557377049180327868852459 (60 இலக்கங்கள்)
சுழலெண்களின் வடிவம்
தொகுசுழலெண்களின் வடிவம்:
இதில் b -அடிமான எண்; p ஒரு பகா எண் மற்றும் b இன் வகுஎண்ணாக p இருக்காது.
எடுத்துக்காட்டு:
- b = 10, p = 7 எனில் கிடைக்கும் சுழலெண் 142857
- b = 12, p = 5 எனில் கிடைக்கும் சுழலெண் 2497
p இன் அனைத்து மதிப்புகளுக்கும் இவ்வாய்ப்பாடு சுழலெண்ணைத் தராது.
எடுத்துக்காட்டு:
- b = 10, p = 13 என மேலுள்ள வாய்ப்பாட்டில் பதிலிடக் கிடைக்கும் எண் 076923076923. இது ஒரு சுழலெண் அல்ல.
- பத்தடிமானத்தில் (b = 10) இவ்வாய்ப்பாட்டில் பதிலிடும்போது சுழலெண்களைத் தரும் p இன் முதல் மதிப்புகள் (OEIS-இல் வரிசை A001913)
- 7, 17, 19, 23, 29, 47, 59, 61, 97, 109, 113, 131, 149, 167, 179, 181, 193, 223, 229, 233, 257, 263, 269, 313, 337, 367, 379, 383, 389, 419, 433, 461, 487, 491, 499, 503, 509, 541, 571, 577, 593, 619, 647, 659, 701, 709, 727, 743, 811, 821, 823, 857, 863, 887, 937, 941, 953, 971, 977, 983, …
- b = 12 எனில் இவ்வாய்ப்பாட்டில் பதிலிடும்போது சுழலெண்களைத் தரும் p இன் முதல் மதிப்புகள் (OEIS-இல் வரிசை A019340)
- 5, 7, 17, 31, 41, 43, 53, 67, 101, 103, 113, 127, 137, 139, 149, 151, 163, 173, 197, 223, 257, 269, 281, 283, 293, 317, 353, 367, 379, 389, 401, 449, 461, 509, 523, 547, 557, 569, 571, 593, 607, 617, 619, 631, 641, 653, 691, 701, 739, 751, 761, 773, 787, 797, 809, 821, 857, 881, 929, 953, 967, 977, 991, ...
- b = 2 எனில், இவ்வாய்ப்பாட்டில் பதிலிடும்போது சுழலெண்களைத் தரும் p இன் முதல் மதிப்புகள் (OEIS-இல் வரிசை A001122)
- 3, 5, 11, 13, 19, 29, 37, 53, 59, 61, 67, 83, 101, 107, 131, 139, 149, 163, 173, 179, 181, 197, 211, 227, 269, 293, 317, 347, 349, 373, 379, 389, 419, 421, 443, 461, 467, 491, 509, 523, 541, 547, 557, 563, 587, 613, 619, 653, 659, 661, 677, 701, 709, 757, 773, 787, 797, 821, 827, 829, 853, 859, 877, 883, 907, 941, 947, ...
- b = 3 எனில், இவ்வாய்ப்பாட்டில் பதிலிடும்போது சுழலெண்களைத் தரும் p இன் முதல் மதிப்புகள் (OEIS-இல் வரிசை A019334)
- 2, 5, 7, 17, 19, 29, 31, 43, 53, 79, 89, 101, 113, 127, 137, 139, 149, 163, 173, 197, 199, 211, 223, 233, 257, 269, 281, 283, 293, 317, 331, 353, 379, 389, 401, 449, 461, 463, 487, 509, 521, 557, 569, 571, 593, 607, 617, 631, 641, 653, 677, 691, 701, 739, 751, 773, 797, 809, 811, 821, 823, 857, 859, 881, 907, 929, 941, 953, 977, ...
பதினறும எண் முறைமையில் (b = 16) இத்தகைய p இன் மதிப்புகள் இல்லை.
பண்புகள்
தொகு- ஒரு சுழலெண் அதன் பிறப்பாக்கி பகாஎண்ணால் பெருக்கப்படும்போது 'அடிமான எண்−1' மதிப்புள்ள இலக்கங்களைக் கொண்ட எண் விடையாகக் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, பத்தடிமானத்தில் சுழலெண் 14287 ஐ அதன் பிறப்பாக்கி 7 ஆல் பெருக்கக் கிடைக்கும் எண்:
- 142857 × 7 = 999999.
- 14 + 28 + 57 = 99, 142 + 857 = 999, 1428 + 5714+ 2857 = 9999 ...
- அனைத்து சுழலெண்களும் 'அடிமான எண்−1' ஆல் வகுபடும்.
மேற்கோள்கள்
தொகுமேலும் படிக்க
தொகு- Gardner, Martin. Mathematical Circus: More Puzzles, Games, Paradoxes and Other Mathematical Entertainments From Scientific American. New York: The Mathematical Association of America, 1979. pp. 111–122.
- Kalman, Dan; 'Fractions with Cycling Digit Patterns' The College Mathematics Journal, Vol. 27, No. 2. (Mar., 1996), pp. 109–115.
- Leslie, John. "The Philosophy of Arithmetic: Exhibiting a Progressive View of the Theory and Practice of ....", Longman, Hurst, Rees, Orme, and Brown, 1820, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-1546-1
- Wells, David; "The Penguin Dictionary of Curious and Interesting Numbers", Penguin Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-008029-5