விக்ரோறியாக் கல்லூரி, சுழிபுரம்

(சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விக்டோரியா கல்லூரி (Victoria College)இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுழிபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது.[1][2]

Victoria College
விக்ரோறியாக் கல்லூரி
Victoria College Jaffna Logo.jpg
முகவரி
யாழ்ப்பாணம்-காரைநகர் வீதி
சுழிபுரம், யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம்
இலங்கை
அமைவிடம்9°45′37.10″N 79°56′33.50″E / 9.7603056°N 79.9426389°E / 9.7603056; 79.9426389ஆள்கூறுகள்: 9°45′37.10″N 79°56′33.50″E / 9.7603056°N 79.9426389°E / 9.7603056; 79.9426389
தகவல்
வகைமாகாணப் பொதுப் பாடசாலை
நிறுவல்1876
நிறுவனர்முதலியார் கனகரத்தினம்
பள்ளி மாவட்டம்வலிகாமம் கல்வி வலயம்
ஆணையம்வட மாகாண சபை
பள்ளி இலக்கம்1011002
அதிபர்வி. சிறீகாந்தன்
ஆசிரியர் குழு52
கல்வி ஆண்டுகள்1-13
பால்கலவன்
வயது வீச்சு5-18
மொழிதமிழ், ஆங்கிலம்
School roll1,025
இணையம்

வரலாறுதொகு

கனகரத்தினம் முதலியார் என்பவர் 1876 ஆம் ஆண்டில் சுழிபுரம் இந்து ஆங்கில பாடசாலையை நிறுவினார். இப்பாடசாலைக்கு பின்னர் விக்ரோரியா கல்லூரி எனப் பெயரிடப்பட்டது. 1880 எனப் பொறிக்கப்பட்ட மணி இப்பாடசாலையில் இன்னும் உள்ளது.[சான்று தேவை] 1892 இல் அரச உதவி பெறும் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டது. 1905 ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட ரிட்ஜ்வே மண்டபத்தை அப்போது பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக இருந்த சேர் என்றி பிளக் திறந்து வைத்தார். 1938 ஆம் ஆண்டில் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.[3]

1946 ஆகத்து 1 இல் இப்பாடசாலையை இலங்கை அரசாங்கம் கையேற்றுக் கொண்டது. 1948 இல் கல்லூரியின் ஆரம்பப் பிரிவும் 1951 இல் நான்கு ஆய்வுகூடங்களும் அமைக்கப்பட்டன. 1955 இல் குருகே மண்டபம் அமைக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்தொகு

  1. Schools Basic Data as at 01.10.2010. வட மாகாண சபை. 2010. Archived from the original on 2013-12-03. https://web.archive.org/web/20131203001953/http://notice.np.gov.lk/index.php?option=com_content&view=article&id=85%3Anpc-schools-basic-data-as-on-01102010. பார்த்த நாள்: 2014-08-10. 
  2. "Province - Northern" (PDF). Schools Having Bilingual Education Programme. கல்வி அமைச்சு. 2013-12-03 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-08-10 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 "விக்ரோறியா கல்லூரி". 2021-06-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-06-20 அன்று பார்க்கப்பட்டது.