சுவப்னா தெபர்மா

இந்திய அரசியல்வாதி

சுவப்னா தெபர்மா (Swapna Debbarma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இவர் திப்ரா மோதா கட்சியின் வேட்பாளராக 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலில் மண்டைபசர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 66.35 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்று 13ஆவது திரிபுரா சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினரானார்.[1][2][3]

சுவப்னா தெபர்மா
Swapna Debbarma
அதிகாரப்புர்வ உருவப்படம், 2023
உறுப்பினர், திரிபுராவின் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
முன்னையவர்திரேந்திரா தெபர்மா
தொகுதிமண்டைபசார் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1975
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிப்ரா மோதா கட்சி
துணைவர்மிண்டு தெபர்மா
பிள்ளைகள்1
வாழிடம்(s)அத்தாய் காமி, இராமச்சந்திரகாட், கோவாய்
வேலைஅரசியல்வாதி
தொழில்சமூகப்பணி

சுவப்னா தெபர்மா திரிபுரா மாநில அரசியலில் திப்ரா மோதா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். கட்சியின் மகளிர் பிரிவான திப்ரா மகளிர் கூட்டமைப்பின் ஒரு பகுதியாகத் திகழ்ந்தார். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் மண்டைபசார் தொகுதியில் போட்டியிட்டு தீரேந்திர தெபர்மாவை தோற்கடித்து வெற்றி பெற்றார். சுவப்னா தெபர்மா பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 22 March 2023.
  2. "Tripura Assembly Election Results in 2023". www.elections.in.
  3. "MLA Profiles | Tripura State Portal". tripura.gov.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவப்னா_தெபர்மா&oldid=3904436" இலிருந்து மீள்விக்கப்பட்டது