சுவர்ண சட்டமன்றக் கட்டிடம், பெல்காம்

சுவர்ண சட்டமன்றக் கட்டிடம் (Suvarna Vidhana Soudha) (பொருள். Golden Legislative House) கர்நாடகா மாநிலத்தின் வடமேற்கில் உள்ள பெல்காம் மாவட்டத் தலைமையிடமான பெல்காம் நகரத்தில் அமைந்த கர்நாடக அரசின் சட்டமன்றக் கட்டிடம் ஆகும். இக்கட்டிடம் 11 அக்டோபர் 2012 அன்று திறந்து வைக்கப்பட்டது. [1]

சுவர்ண சட்டமன்றக் கட்டிடம்
பெல்காம் நகரத்தில் உள்ள கர்நாடக சட்டமன்றத்தின் சுவர்ண சட்டமன்றக் கட்டிடம்
சுவர்ண சட்டமன்றக் கட்டிடம், பெல்காம் is located in இந்தியா
சுவர்ண சட்டமன்றக் கட்டிடம், பெல்காம்
பொதுவான தகவல்கள்
நிலைமைசட்டமன்றக் கட்டிடம்
கட்டிடக்கலை பாணிபுதிய-திராவிட கட்டிடக்கலை
இடம்பெல்காம், கர்நாடகா, இந்தியா
முகவரிதேசிய நெடுஞ்சாலை சாலை, பாஸ்த்வாத், பெல்காம், கர்நாடகா, இந்தியா
நகரம்பெல்காம்
நாடு இந்தியா
ஆள்கூற்று15°48′48″N 74°34′17″E / 15.8134°N 74.5714°E / 15.8134; 74.5714
கட்டுமான ஆரம்பம்2007
நிறைவுற்றது2012
துவக்கம்11 அக்டோபர் 2012
செலவு4 பில்லியன் (US$50 மில்லியன்)
உரிமையாளர்கர்நாடக அரசு
உயரம்150 அடிகள் (46 m)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை4 + 1 அடித்தளம்
தளப்பரப்பு145,730 சதுர மீட்டர்கள் (1,568,600 sq ft)
வடிவமைப்பும் கட்டுமானமும்
முதன்மை ஒப்பந்தகாரர்பி. ஜி. சிர்க்கே கட்டுமான தொழில்நுட்ப குழுமம்
பிற தகவல்கள்
இருக்கை திறன்300 இருக்கைகள்

கட்டிடம்

தொகு

கருநாடகம் மாநிலம் நிறுவப்பட்ட 50வது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த தங்க சட்டமன்றக் கடடிடம் பெல்காம் நகரத்தில் நிறுவப்பட்டது.[2]நான்கு தளங்கள் கொண்ட இக்கட்டிடத்தின் பரப்பளவு 60,398 சதுர மீட்டர் ஆகும். இக்கட்டிடத்தில் 300 சட்டமன்ற மற்றும் 100 சட்ட மேலவை உறுப்பினர்கள் அமரும் வகையில் அவைகள், மைய மண்டபம் மற்றும் 38 செயலக அலுவலர்களுக்கான அறைகள் உள்ளது.[3][1]இந்த சட்டமன்ற வளாகம் 127 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

விமர்சனம்

தொகு

சுவர்ண சவுதா கட்டிடம் ஒரு ஆடம்பரம் என விமர்சிக்கப்பட்டது. ஏனெனில் இந்த கட்டிடம் கர்நாடக சட்டமன்றத்தின் கூட்டத்தை நடத்த ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மாநில அரசாங்கத்தின் சட்டமன்றக் குழு மற்றும் பிராந்தியக் கூட்டங்களும், சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாத போது, வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான மாநாடுகள் மற்றும் சந்திப்புகளையும் இக்கட்டிடத்தில் நடைபெறுகிறது.[4]பெல்காம் எல்லைப் பிணக்கில்[5][6] கர்நாடக அரசு தங்கள் தரப்பை வலுப்படுத்தவே இந்த கட்டிடம் பெல்காம் நகரத்தில் கட்டியதாக மராத்தியர்கள் கருதுகின்றனர்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "A new chapter begins today". The Hindu. 11 October 2012. http://www.thehindu.com/news/states/karnataka/a-new-chapter-begins-today/article3985269.ece?homepage=true. 
  2. "Border Posturing". Open Magazine.
  3. "Suvarna Vidhana Soudha is not fully ready". Deccan Herald. 1 June 2012. http://www.deccanherald.com/content/253844/suvarna-vidhana-soudha-not-fully.html. 
  4. "Suvarna Soudha to be opened in Sept". Deccan Herald. 6 August 2012. http://www.deccanherald.com/content/269728/suvarna-soudha-opened-sept.html. 
  5. The Maharashtra-Karnataka border dispute
  6. {https://www.thehindu.com/news/national/maharashtra-karnataka-dispute-belagavi-controversy-hath-bommai-bjp-supreme-court-hearing/article66204244.ece What is the Karnataka-Maharashtra border dispute?]