சுவாத் இராச்சியம்
சுவாத் இராச்சியம் ('State of Swat) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் பாதுகாப்பில் 1918 முதல் 1947 முடிய இருந்த சுதேச சமஸ்தானம் ஆகும். சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி சுவாத் இராச்சியம் 28 சூலை 1969 அன்று பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.[2] சுவாத் இராச்சியத்தை 1849ல் நிறுவியவர் சையது பாபா ஆவார்.[3][4]பின்னர் சுவாத் இராச்சியத்தின் பகுதிகளை சுவாத் மாவட்டம், புனேர் மாவட்டம் மற்றும் சாங்லா மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, கைபர் பக்துன்வா மாகாணத்தில் இணைக்கப்பட்டது.
சுவாத் இராச்சியம் | |
---|---|
1849–1969 | |
கொடி | |
தலைநகரம் | செய்யது செரீப் |
சமயம் | இசுலாம் |
அரசாங்கம் | சுதேச சமஸ்தானம் |
வரலாறு | |
• தொடக்கம் | 1849 |
• வடமேற்கு எல்லைப்புற மாகாணம், பாகிஸ்தான் | 28 சூலை 1969 |
பரப்பு | |
• மொத்தம் | 2,934 sq mi (7,600 km2)[1] |
நாணயம் | ரூபாய் |
தற்போதைய பகுதிகள் | சுவாத் மாவட்டம், புனேர் மாவட்டம் மற்றும் சாங்லா மாவட்டம், கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான் |
சுவாத் இராச்சிய ஆட்சியாளர்கள்
தொகுசுவாத் இராச்சிய ஆட்சியாளர்கள் அமீர் எனும் பாதுஷா பட்டத்துடன் ஆட்சி செய்தனர். பின்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது வாலிகள் என்ற பட்டத்துடன் ஆண்டனர்.
பதவிக் காலம் | சுவாத் ஆட்சியாளர்கள் |
---|---|
1849–11 மே 1857 | அக்பர் ஷா |
11 மே 1857–1878 | சையது பாபா |
1878–1916 | கைவிடப்பட்ட நிலையில் அரசு |
1916–செப்டம்பர் 1918 | சையது அப்துல் ஜாபர் ஷா |
செப்டம்பர் 1918–12 டிசம்பர் 1949 | அப்துல் வதூத் |
12 டிசம்பர் 1949–28 சூலை 1969 | மியாங்குல் ஜெகான் செப் |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Rum (2008), ப. 16.
- ↑ Claus, Peter J.; Diamond, Sarah; Ann Mills, Margaret (2003). South Asian Folklore: An Encyclopedia : Afghanistan, Bangladesh, India, Nepal, Pakistan, Sri Lanka. Taylor & Francis. p. 447. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415939195.
- ↑ S.G. Page 398 and 399, T and C of N.W.F.P by Ibbetson page 11 etc
- ↑ Fredrik Barth, Features of Person and Society in Swat: Collected Essays on Pathans, illustrated edition, Routledge, 1981
மேலும் படிக்க
தொகு- The Last Wali of Swat: An Autobiography as Told by Fredrik Barth (Asian Portraits), by Fredrik Barth
- Sack, John (2000). Report from Practically Nowhere. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-595-08918-6.
- Rum, Sultan-i (2008). Swat State, 1915–1969, From Genesis to Merger: An Analysis of Political, Administrative, Socio-Political, and Economic Development. Karachi: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-547113-X.
- Sultan-i-Rome. Forestry in the Princely State of Swat and Kalam (North-West Pakistan): A Historical Perspective on Norms and Practices, NCCR IP6 Working Paper No. 6. Zurich: Department of Geography, University of Zurich (2005)