புனேர் மாவட்டம்
புனேர் மாவட்டம் (Buner District), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தக்கர் நகரம் ஆகும். இம்மாவட்டம் 6 தாலுகாக்களைக் கொண்டது. இம்மாவட்டத்தில் பௌத்த தொல்லியல் களமான ராணிகட் உள்ளது. புனேர் மாவட்டப் பகுதிகள் சுவாத் இராச்சியத்தின் கீழ் இரந்தது.
Tangora Chagharzai
ضلع بونیر Buneri | |
---|---|
மாவட்டம் | |
அடைபெயர்(கள்): குல் தா நமய்ர்[1] | |
குறிக்கோளுரை: சூபிக்களின் நிலம் (اولیاء کی سرزمین) | |
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்) | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
கோட்டம் | மாலகண்ட் |
தலைமையிடம் | தக்கர்[2] |
அரசு | |
• வகை | மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,865 km2 (720 sq mi) |
மக்கள்தொகை (2017)[3] | |
• மொத்தம் | 8,95,460 |
• அடர்த்தி | 480/km2 (1,200/sq mi) |
இனம் | Buneri |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 19290 |
இடக் குறியீடு | 0939 |
தாலுகாக்கள் | 6 |
ஒன்றியக் குழுக்கள் | 27[4] |
இணையதளம் | buner |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி புனேர் மாவட்ட மக்கள் தொகை 8,95,460 ஆகும். அதில் ஆண்கள் 445,872 மற்றும் பெண்கள் 449,555 ஆக உள்ளனர். இம்மாவட்ட மக்களில் 100% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். எழுத்தறிவு 46.84% ஆக உள்ளது. பஷ்தூ மொழியை 97.56% மக்கள் பேசுகின்றனர். சிறுபான்மை சமயத்தவர்கள் 1,402 பேர் உள்ளனர்.[3]
மாவட்ட நிர்வாகம்
தொகுபுனேர் மாவட்டம் 6 தாலுகாக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்:
- தக்கர் தாலுகா
- காக்ரா தாலுகா
- குது கேல் தாலுகா
- மன்டனர் தாலுகா
- சாகர்சாய் தாலுகா
- கடேசாய்/சலார்சாய் தாலுகா
நாடாளுமன்ற & சட்டமன்றத் தொகுதிகள்
தொகுஇம்மாவட்டம் ஒரு பாகிஸ்தான் நாடாளுமன்றத் தொகுதி கொண்டுள்ளது.[5]கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 3 தொகுதிகளைக் கொண்டுள்ளது.[6]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "بونیر کے روایتی پھول نمیر سے منسوب تین روزہ میلہ شروع ہوگیا". 13 October 2017. Archived from the original on 20 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2022.
- ↑ "Uncertainty rules Pakistan's Buner district" பரணிடப்பட்டது 2014-07-14 at the வந்தவழி இயந்திரம், Radio Nertherlands Worldwide
- ↑ 3.0 3.1 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
- ↑ "Village/Neighbourhood Council". lgkp.gov.pk. Archived from the original on 2018-02-26. பார்க்கப்பட்ட நாள் 2017-07-03.
- ↑ "Election Commission of Pakistan". Archived from the original on 2013-02-24.
- ↑ Constituencies and MPAs – Website of the Provincial Assembly of the NWFP பரணிடப்பட்டது ஏப்பிரல் 22, 2009 at the வந்தவழி இயந்திரம்