தக்த்-இ-பாகி
தக்த்-இ-பாகி (Takht-i-Bahi) (உருது மொழிபெயர்ப்பு:நீர் ஊற்றின் சிம்மாசனம்), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகணத்தின் மார்தன் மாவட்டத்தில் உள்ள செரி பக்லோல் எனுமிடத்தில் உள்ள மலைப்பகுதியில் அமைந்த சிதிலமடைந்த காந்தாரப் பண்பாட்டில் நிறுவப்பட்ட பௌத்த விகாரைகளின் தொகுப்பாகும். இந்த பௌத்தக் கட்டிடங்கள் இந்தோ-பார்த்தியப் பேரரசு காலத்தில் கிபி முதல் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. யுனெஸ்கோ நிறுவனம் இதனை 1980-ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.[1]இத்தொல்லியல் களம் மார்தன் நகரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கிரேக்க எலனியக் கட்டிடப் பாணியில்[2] கட்டப்பட்ட இந்த கட்டிடங்கள் இசுலாமிய ஆட்சியின் போது கிபி ஏழாம் நூற்றாண்டில் சிதைக்கப்பட்டது.
தக்த்-இ-பாகி تختِ باہی | |
---|---|
சிதிலமடைந்த பௌத்த விகாரைகளின் தொகுப்பு | |
இருப்பிடம் | செரி பக்லோல், மார்தன் மாவட்டம், கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான் |
ஆயத்தொலைகள் | 34°17′10″N 71°56′48″E / 34.28611°N 71.94667°E |
வகை | தொல்லியல் களம் |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிபி முதல் நூற்றாண்டு |
பயனற்றுப்போனது | கிபி ஏழாம் நூற்றாண்டு |
அதிகாரபூர்வ பெயர்: சிதிலமடைந்த தக்த்-இ-பாகி பௌத்த தொல்லியல் களம், செரி பக்லோல் அருகில் | |
வகை | பண்பாடு |
அளவுகோல் | iv |
வரையறுப்பு | 1980 (4வது உலகப் பாரம்பரியக் குழுவின் அமர்வில்) |
சுட்டெண் | 140 |
மண்டலம் | ஆசிய-பசிபிக் |
அமைப்பு
தொகுதக்த்=இ-பாகி தொல்லியல் களம் நான்கு முக்கியப் பகுதிகளைக் கொண்டது.
படக்காட்சிகள்
தொகு-
கிரேக்கப் பாணியில் நிறுவப்பட்ட கௌதம புத்தர் சிலை, கிபி 2 அல்லது 3-ஆம் நூற்றாண்டு
-
சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கௌதம புத்தர் சிலை
-
சாக்கிய முனி கௌதம புத்தர் சிற்பம்
-
காவல் தெய்வங்கள்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Khaliq, Fazal (1 June 2015). "Takht-i-Bhai: A Buddhist monastery in Mardan". DAWN.COM. பார்க்கப்பட்ட நாள் 8 November 2015.
- ↑ Yi, Joy Lidu. The Global Connections of Gandhāran Art (in ஆங்கிலம்). p. 70.
வெளி இணைப்புகள்
தொகு- Buddhist Ruins of Takht-i-Bahi and Neighbouring City Remains at Sahr-i-Bahlol - UNESCO World Heritage List
- UNESCO Periodic Report Summary - Includes a map of the complex.
- Map of Gandhara archeological sites, from the Huntington Collection, Ohio State University (large file)