மார்தன் மாவட்டம்

மார்தான் மாவட்டம் (Mardan District),பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3][4]இதன் நிர்வாகத் தலைமையிடம் மார்தான் நகரம் ஆகும். பஷ்தூ மொழியில் மார்தான் எனில் வீரமான மனிதர்கள் என்று பொருள். இம்மாவட்டத்தின் தலைமையிட நகரமாக மார்தான் அருகே தக்த்-இ-பாகி எனுமிடத்தில் சிதைந்த நிலையில் பௌத்த கட்டிடங்கள் உள்ளது. [5][6] மேலும் சமால் கார்கி[7] பௌத்த தொல்லியல் களம் உள்ளது.

மார்தன் மாவட்டம்
ضلع مردان
மாவட்டம்
மார்தான்
மேல்: தக்தி இ பாகி சிதிலமடைந்த பௌத்த நினவுச் சின்னம்
அடியில்: மியான் கான் நகரம் அருகில் மலைகள்
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மார்தன் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மார்தன் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
நாடு பாக்கித்தான்
மாகாணம் கைபர் பக்துன்வா மாகாணம்
கோட்டம்மார்தான்
தலைமையிடம்மார்தான்
அரசு
 • வகைமாவட்டம்
பரப்பளவு
 • Total1,632 km2 (630 sq mi)
மக்கள்தொகை
 (2017)[1]
 • Total23,73,399
 • அடர்த்தி1,500/km2 (3,800/sq mi)
 • நகர்ப்புறம்
4,39,325
 • நாட்டுப்புறம்
19,33,736
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
மொழிகள்பஷ்தூ மொழி 98.44% [2]:33
தாலுகாக்கள்6
இணையதளம்mardan.kp.gov.pk

அமைவிடம்

தொகு

மார்தன் மாவட்டத்தின் வடக்கில் இதன் வடக்கில் புனேர் மாவட்டம் மற்றும் மாலகண்ட் மாவட்டம், கிழக்கில் சுவாபி மாவட்டம் மற்றும் புனேர் மாவட்டம், தெற்கில் நவ்செரா மாவட்டம், மேற்கில் சார்சத்தா மாவட்டம்]] மற்றும் மாலகண்ட் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

புவியியல்

தொகு

காபுல் ஆறு பாயும் மார்தன் மாவட்டத்தின் வடகிழக்கில் மலைப்பகுதிகளும், தென்மேற்கில் சமவெளி தரைகளும் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மார்தன் மாவட்ட மக்கள் தொகை 23,73,399 ஆகும். அதில் ஆண்கள் 12,01,122 மற்றும் பெண்கள் 11,72,215 ஆக உள்ளது. இம்மாவட்ட மக்களில் 81.45%% விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். எழுத்தறிவு 56.81% ஆக உள்ளது. பஷ்தூ மொழி 98.25% விழுக்காட்டினர் பேசுகின்றனர். சிறுபான்மை சமயத்தவர்கள் பேர் உள்ளனர்.[1]

சமயம்

தொகு
மார்தன் மாவட்டத்தில் சமயம்
சமயம் மக்கள் தொகை (1941)[8]:22 விழுக்காடு (1941) மக்கள் தொகை (2017)[1] விழுக்காடு (2017)
இசுலாம்   483,575 95.47% 2,370,304 99.87%
சீக்கியம்   11,838 2.34% 160 0.01%
இந்து சமயம்   10,677 2.11% 329 0.01%
கிறித்துவம்   449 0.09% 2,021 0.09%
மொத்த மக்கள் தொகை 506,539 100% 2,373,399 100%

மாவட்ட நிர்வாகம்

தொகு

மார்தன் மாவட்டம் 5 தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்:[9][10][11]

 • மார்தன் தாலுகா
 • தக்த் பாய் தாலுகா
 • கட்லாங் தாலுகா
 • ருஸ்தம் தாலுகா
 • காரி கபுரா தாலுகா

தேசிய சட்டமன்றம் & மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

இம்மாவட்டத்திலிருந்து பாகிஸ்தான் தேசிய சட்ட சபைக்கு 4 தொகுதிகளும், கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 9 தொகுதிகள் கொண்டுள்ள்து.[12][13]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. 1.0 1.1 1.2 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
 2. 1998 District Census report of Mardan. Census publication. Vol. 28. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1999.
 3. "Mardan District Demographics". kp.gov.pk. Archived from the original on 1 December 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-11-29.
 4. Correspondent, The Newspaper's (2017-07-01). "Mardan district council approves budget" (in en-US). DAWN.COM. https://www.dawn.com/news/1342468. 
 5. Khaliq, Fazal (2015-06-01). "Takht-i-Bhai: A Buddhist monastery in Mardan" (in en-US). DAWN.COM. https://www.dawn.com/news/1185519. 
 6. "Unesco, Norway to preserve archaeological sites in NWFP". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-29.
 7. APP (2012-04-17). "KP launches awareness campaign on archeological sites" (in en-US). DAWN.COM. https://www.dawn.com/news/711253. 
 8. "CENSUS OF INDIA, 1941 VOLUME X NORTH-WEST FRONTIER PROVINCE". பார்க்கப்பட்ட நாள் 14 October 2021.
 9. "DIVISION, DISTRICT AND TEHSIL/CENSUS DISTRICT KHYBER PAKHTOONKHWA PROVINCE (PDF)" (PDF). www.pbscensus.gov.pk. Archived from the original (PDF) on 1 December 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-11-29.
 10. "Pakistan Tehsil Wise Census 2017 [PDF]" (PDF). www.pbscensus.gov.pk. Archived from the original (PDF) on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-11-29.
 11. Tehsils & Unions in the District of Mardan - Government of Pakistan பரணிடப்பட்டது 5 ஆகத்து 2012 at Archive.today
 12. Report, Bureau (2002-08-09). "PESHAWAR: Peshawar gets 4 NA, 11 PA seats" (in en-US). DAWN.COM. https://www.dawn.com/news/51800. 
 13. Constituencies and MPAs - Website of the Provincial Assembly of Khyber-Pakhtunkhwa பரணிடப்பட்டது 10 சூலை 2010 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்தன்_மாவட்டம்&oldid=3607580" இலிருந்து மீள்விக்கப்பட்டது