ராணிகட், பாகிஸ்தான்
ராணிகட் (Ranigat), இந்தி மொழிச் சொல்லான ராணி (அரசி) மற்றும் பஷ்தூ மொழிச் சொல்லான கட் (பெரிய பாறை) என்ற பொருளில் ராணியின் பாறை என அழைக்கப்படுகிறது. இது உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.
சிதிலமடைந்த பௌத்த விகாரம், ராணிகட் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாடு |
UNESCO region | உலகப் பாரம்பரிய களங்கள், ஆசிய-பசிபிக் |
கி பி 6ஆம் நூற்றாண்டு காலத்திய புத்த விகாரம், பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தின், புனேர் மாவட்டத்தில், தோதாலியா எனுமிடத்தில் அமைந்துள்ளது.[1]
கள விளக்கம்
தொகுராணிகட் புத்த விகாரம் நினைவுத்தூண்கள், மடாலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் கொண்டது. இது 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. பெஷாவர் அல்லது இஸ்லாமாபாத் நகரத்திலிருந்து பேருந்து சாலை வழியாக 20 கி மீ தொலைவில் உள்ள ராணிகட்டை அடையலாம்.[2]
உலகப்பாரம்பரிய களங்கள்
தொகுயுனேஸ்கோ நிறுவனத்தின் உலகப் பாரம்பரிய களங்களின் தற்காலிக பட்டியலில் ஒன்றாக 30 சனவரி 2014 அன்று இராணிகட் பௌத்த விகாரமும் பட்டியலிடப்பட்டுள்ளது.[2]
இதனையும் காண்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- Archaeological Site of Ranigat - UNESCO World Heritage Centre Retrieved 2009-03-03.
- Ranigat: 2nd to 6th Century AD Retrieved 2009-03-03.