சுவாந்தே அறீனியசு

சுவீடிஷ் நாட்டு விஞ்ஞானி (1859-1927)

சுவாந்தே அறீனியசு (Svante August Arrhenius)என்பவர் சுவீடன் நாட்டு இயற்பியலாளர் ஆவார். அடிப்படையில் ஓர் இயற்பியலாளரான இவர் பெரும்பாலும் வேதியியலாளர் என்றே கருதப்பட்டார். இவர் 1859 பெப்ரவரி 19-ல் சுவீடனில் உள்ள உப்சாலா நகரில் பிறந்தார். உப்சலா பல்கலைக்கழகத்திலும், ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். 1905-ல் நோபல் பரிசு பெற்றார். 1927 அக்டோபர் 2-ல், ஸ்டாக்ஹோம் நகரில் இறந்தார். இவரின் நினைவாக, சமன்பாட்டிற்கும் மற்றும் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. கரைசலில் நிகழும் வேதிவினைகள் எலக்ட்ரான்களுக்கு இடையில் நிகழும் வினைகளே என்று இவர் குறிப்பிட்டார்[1][2][3]. எலக்ட்ரான் பிரிகை தொடர்பான இவருடைய கண்டுபிடிப்பிற்காக 1903 ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சுவாந்தே அறீனியசு (1909)

சான்றுகள் தொகு

  1. Harris, William; Levey, Judith, தொகுப்பாசிரியர்கள் (1975). The New Columbia Encyclopedia (4th ). New York City: Columbia University. பக். 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-231035-721. https://archive.org/details/newcolumbiaencyc00harr. 
  2. McHenry, Charles, தொகுப்பாசிரியர் (1992). The New Encyclopædia Britannica. 1 (15 ). Chicago: Encyclopædia Britannica, Inc.. பக். 587. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:085-229553-7. 
  3. Cillispie, Charles, தொகுப்பாசிரியர் (1970). Dictionary of Scientific Biography (1 ). New York City: Charles Scribner's Sons. பக். 296–302. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-684101-122. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாந்தே_அறீனியசு&oldid=3582631" இலிருந்து மீள்விக்கப்பட்டது