சுவார்ட் கடற்கரை

சுவார்ட் கடற்கரை (ஸ்வார்ட் கடற்கரை, Sword Beach) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையில் நார்மாண்டி கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர்.

சுவார்ட் கடற்கரை
ஓவர்லார்ட் நடவடிக்கையின் பகுதி

ஜூன் 6 காலை, கடும் குண்டுமழைக்கிடையே சுவார்ட் கடற்கரையிலிருந்து முன்னேறக் காத்திருக்கும் பிரிட்டானியத் தரைப்படையினர்.
நாள் ஜூன் 6, 1944
இடம் சென்-ஆபின் முதல் ஊயிஸ்டிரஹாம் வரை, பிரான்சு[1]
ச நேசநாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
சுதந்திர பிரெஞ்சுப் படைகள்
 ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம்ஜான் குராக்கர்
ஐக்கிய இராச்சியம் தாமஸ் ரென்னி
நாட்சி ஜெர்மனி விலெம் ரிக்டர்
நாட்சி ஜெர்மனி எட்கார் ஃபியூக்டிங்கர்
பலம்
28,845 வீரர்கள்[2]
223 டாங்குகள்[3]
716வது காலாட்படை டிவிசனின் எட்டு கம்பனிகள்
21வது கவச டிவிசனின் 9,790 வீரர்கள்
40 தாக்கு பீரங்கிகள்.
இழப்புகள்
குறைந்தபட்சம் 2,683[4][5]தெரியவில்லை
54[6]–~40 டாங்குகள்[7]
6 குண்டுவீசி விமானங்கள்[8]

நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. படையெடுப்பு நிகழ்ந்த கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - யூட்டா, ஒமாகா, கோல்ட், ஜூனோ மற்றும் சுவார்ட்.

8 கிமீ நீளமுள்ள சுவார்ட் கடற்கரை படையிறக்கப் பகுதியின் கிழக்கு எல்லையில் அமைந்திருந்தது. ஓர்ன் ஆற்று முகத்துவாரம் முதல் சென்-ஆபின் கம்யூன் வரை அமைந்திருந்த இக்கடற்கரையில் பிரிட்டானியப் படைகள் தரையிறங்கின. 3வது பிரிட்டானிய காலாட்படை டிவிசன், 27வது தனிக் கவச பிரிகேட், 1வது சிறப்பு சேவை பிரிகேட், சுதந்திர பிரெஞ்சு கமாண்டோ, 41வது ராயல் மரீன் கமாண்டோ ஆகியவை சுவார்டில் தரையிறங்கிய படைப்பிரிவுகளாகும். இவற்றை எதிர்க்க ஜெர்மானிய 716வது காலாட்படை டிவிசனும், 352வது டிவிசனின் சில பிரிவுகளும் சுவார்ட் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. பிரிட்டானியப் படைகள் ஜூன் 6ம் தேதி பெரும் எதிர்ப்பு எதுவுமின்றி சுவார்ட் கடற்கரையில் தரையிறங்கி அதனைக் கைப்பற்றின. மாலை நான்கு மணியளவில் தான் ஜெர்மானிய எதிர்த் தாக்குதல்கள் தொடங்கின. ஆனால் அவை எளிதில் முறியடிக்கப்பட்டன. இரவு 8 மணியளவில் ஜெர்மானிய 21வது பான்சர் (கவச) டிவிசன் சுவார்ட் கடற்கரையை மீண்டும் தாக்கியது. ஆனால் இத்தாக்குதலும் முறியடிக்கப்பட்டது. நார்மாண்டியின் ஐந்து கடற்கரைகளுள் பான்சர் (கவச) படைப்பிரிவுகளால் தாக்கப்பட்ட ஒரே கடற்கரை சுவார்ட் மட்டுமே.

ஜூன் 6ம் தேதி இரவுக்குள், சுவார்டில் 28,853 பிரிட்டானிய வீரர்கள் தரையிறங்கியிருந்தனர். 683 வீரர்கள் இத்தரையிறக்கத் தாக்குதலில் மரணமடைந்தனர். மறுநாள் ஜூனோ கடற்கரையில் தரையிறங்கியிருந்த கனடிய படைப்பிரிவுகளுடன் பிரிட்டானியப் படைப்பிரிவுகள் கைகோர்த்தன. நார்மாண்டியின் உட்பகுதியிலிருந்த கான் நகரை நோக்கி முன்னேறத் தொடங்கின.

வெளி இணைப்புகள் தொகு


மேற்கோள்கள் தொகு

  1. Ford, pp. 36-37, 40-41
  2. Ellis, p. 223
  3. Fortin, p. 58
  4. 3rd Infantry Division recorded the loss of 2,635 men on D-Day; 8th Infantry Brigade recorded 367 casualties, 9th Infantry Brigade are not available for D-Day but are recorded as slight, 185th Infantry Brigade lost 232 men, and the divisional machine-gun battalion lost 36 men.Ford, p. 86
  5. The Commandos lost 18 men killed and 30 wounded on the beaches alone. Ford, p. 112
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Ellis204 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. 20 tanks destroyed and "over 30 damaged"Ford, p. 80"
  8. Buckley (2006), p. 137
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவார்ட்_கடற்கரை&oldid=1358136" இலிருந்து மீள்விக்கப்பட்டது