சுவிதா தொடருந்துகள்
பண்டிகைக் காலங்களிலும் சிறப்பு நாள்களிலும் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காகத் தென்னக இரயில்வே சுவிதா தொடருந்துகளை (Suvidha Trains) அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின்படி, 14 ஆகத்து 2015 முதல் சென்னை எழும்பூர் – திருநெல்வேலி, செண்ட்ரல் – எறணாகுளம் இடையே சுவிதா சிறப்புத் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன.
சுவிதா தொடருந்துகளில் அனைத்து வகை முதல் வகுப்புப் பெட்டிகள், பொதுப் பெட்டிகள், இரண்டாம் வகுப்பு அமரும் பெட்டிகள் இல்லை.[1]
சுவிதா தொடருந்துக்கான முன்பதிவு மையங்களிலும் இணையவழியாகவும் முன்பதிவு செய்யலாம். சுவிதா தொடருந்துகளில் பயணம் செய்யக் காத்திருப்பு பயணச்சீட்டு வழங்குவது இல்லை. உறுதி செய்யப்பட்ட, படுக்கை உறுதி செய்யப்பட்ட முன்பதிவுப் பயணச்சீட்டுகள் (ஆர். ஏ. சி.) மட்டும் வழங்கப்படும்..[2]
முன்பதிவுக் காலம் பயண நாள்களிலிருந்து குறைந்தது 10 நாள்கள் முதல் கூடியது 30 நாள்களுக்குள் இருக்கும். அதிகபட்ச பயணக் கட்டணம் வழக்கமான கட்டணத்தை விடக் கூடியதாக, அதாவது தட்கல் கட்டணத்துக்கு இணையாக இருக்கும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.ndtv.com/india-news/suvidha-trains-with-dynamic-fare-to-start-in-july-771194
- ↑ http://www.indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/traffic_comm/Comm-Cir-2015/CC_33_15.pdf
- ↑ "Railways Decide to Run Suvidha Trains". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-18.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)