சுவிஸ் தமிழர்கள்

தமிழ்ப் பின்புலம் உடைய சுவிட்சர்லாந்து வாழ் மக்களை சுவிஸ் தமிழர்கள் எனலாம். சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழர்களில் பெரும்பாலோனோர் இலங்கையை பூர்விகமாக கொண்டவர்கள் ஆவார். இவர்கள் 1980ஆம் ஆண்டு மற்றும் 1990ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கையில் நடந்த இனக்கலவர உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இங்கு வந்து குடியேறியவர்கள் ஆவார்கள்.[1] சுவிஸில் 42,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.

சுவிஸ் தமிழர்கள்
மொத்த மக்கள்தொகை
42,000
மொழி(கள்)
தமிழ், சுவிஸ் ஜெர்மன், சுவிஸ் ஜெர்மன், சுவிஸ் இத்தாலி
சமயங்கள்
சைவ சமயம் பெரும்பாலோர்
கிறிஸ்தவம், இசுலாம்

இங்கு வாழும் தமிழர்கள் சுவிஸ் நாட்டு மக்களுடன் நன்கு ஒருங்கிணைந்தவர்களாகவும் மற்றும் தங்களின் கடின உழைப்பினால் உயர்தவர்களாகவும் உள்ளார்கள். மற்றும் பல இளம் தமிழர்கள் பள்ளி கல்வியில் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு வாழும் தமிழர்கள் மொழி, பண்பாடு, மதம் மற்றும் சாதி திருமணம் போன்றவற்றை இன்னும் கடைபிடித்து வருகின்றார்கள்[2] அதனால் சுவிஸ் பண்பாடுடன் வேறுபட்டு காணப்படுகின்றார்கள்.[3]

வசிக்கும் இடங்கள் தொகு

சுவிஸ் நாட்டில் சுமார் 42,000 தமிழர்கள் வசிக்கின்றார்கள், இதில் பெரும்பாலோர் இரட்டை குடியுரிமையுடனும் மற்றும் இரண்டாம் தலைமுறையினர் சுவிஸ் குடிமையுடன் வசித்து வருகின்றார்கள்.[4] அதில் பெரும்பாலோர் சுவிஸ் ஜெர்மன் மொழி பேசும் மாநிலங்களான பேர்ன், பேசெல் மற்றும் சூரிக்கு போன்ற நகரங்களில் அடர்த்தியாக வாழ்த்து வருகின்றார்கள்.[5]

மதம் தொகு

 
சிறீ சிவசுப்பிரமணியார் கோயில்

இங்குள்ள தமிழர்களில் பெரும்பாலோனோர் சைவ சமயத்தை பின்பற்றுபவர்களாகவும், குறிப்பிட்ட அளவினோர் கிறிஸ்தவத்தையும் மற்றும் குறைவான அளவினார் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். ஸ்ரீ சிவசுப்பிரமணியார் கோயில் என்பது சூரிக்கு நகரத்தில் அமைத்துள்ளது, இதுவே சுவிட்சர்லாந்ந்தில் மிக பிரபலமான மற்றும் மிகப்பெரிய சைவக்கோவில் ஆகும்.

சுவிட்சர்லாந்தில் உள்ள பெரும்பாலான தமிழ் கிறிஸ்தவர்கள் சுவிஸ் திருச்சபைகளில் ஒருங்கிணைந்தவர்கள் மற்றும் பெரும்பாலான தமிழ் கிறிஸ்தவர்கள் சூரிக்கு நகரத்தில் வாழ்கின்றனர்

தமிழ் கல்வி தொகு

சுவிட்சர்லாந்தில் 25 ஆண்டு காலங்ககளாக தமிழ் கல்வி சேவை நடந்து வருகின்றது. இச் சேவை தமிழ் கல்விசேவை சுவிட்சர்லாந்து[6]என்ற அமைப்பின் மூலம் சுவிட்சர்லாந்து முழுவது ஏறத்தாழ 50 தமிழ் கல்வி நிலையகங்கள் அமைந்துள்ளது. ஐரோப்பா நாடுகளில் வாழும் தமிழர்களில் சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழர்கள் தமிழ் கல்வியில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குகிறார்கள்.

அரசியல் தொகு

சுவிற்சர்லாந்து தமிழர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு ஜெனிவாவில் நடைபெற்ற வெல்க தமிழ் எதிர்ப்பு போராட்ட நிகழ்வில் 10 000 மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டார்கள். பல பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்துவந்த தமிழர்களும் இதில் அடங்குவர்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவிஸ்_தமிழர்கள்&oldid=2767019" இருந்து மீள்விக்கப்பட்டது