சுவைத்திரள்
சுவைத்திரள் | |
---|---|
இதழாசிரியர் | திக்கவயல் தர்மு |
துறை | நகைச்சுவை |
வெளியீட்டு சுழற்சி | இரு மாதத்துக்கு ஒரு முறை |
மொழி | தமிழ் |
முதல் இதழ் | 1993 |
இறுதி இதழ் | அக்டோபர் 2011[1] |
இதழ்கள் தொகை | 37 |
வெளியீட்டு நிறுவனம் | |
நாடு | இலங்கை |
வலைப்பக்கம் |
சுவைத்திரள் ஈழத்தில் மட்டக்களப்பில் இருந்து 1993 முதல் 2011 வரை வெளிவந்த இரு மாதத் தமிழ் இதழ். இது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த சிரித்திரன் மாத இதழைப் பின்பற்றி ஒரு முழு நகைச்சுவை இதழாக வெளிவந்தது. மறைந்த திக்கவயல் சி. தர்மகுலசிங்கம் இதன் ஆசிரியராக இருந்தார். நகைச்சுவைத் துணுக்குகள், கேலிச் சித்திரங்கள், அங்கதம், இடக்கு முடக்கான கேள்வி பதில்கள், நகைச்சுவை பார்வை கொண்ட அலசல்கள் என பல தரப்பட்ட நகைச்சுவை படைப்புகள் சுவைத்திரளில் வெளிவந்தன. சுவைத்திரளுக்கு ஓவியங்கள், கேலிச் சித்தரங்களை சிறீ கோவிந்தசாமி வரைந்தார். ஆசிரியர் சி. தர்மகுலசிங்கம் 2011 நவம்பரில் இறந்த பின்னர் இவ்விதழ் நிறுத்தப்பட்டு விட்டது.
கடைசியாக வந்த இதழ்- ஆவணி புரட்டாதி ஐப்பசி காலாண்டிதழாக 72 பக்கங்களுடன் வெளிவந்தது. 37 வது இதழ் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பத்திரிகை பற்றிய விபரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. செங்கை ஆழியானின் ‘இலக்கியத்தில் சரித்திரன் காலம்’ தொடர் கட்டுரை (9), மாஸ்டர் சிவலிங்கத்தின் ‘இளமை நினைவுகள்’ (தொடர்கட்டுரை), மைசிந்திய மனிதர்கள் (கட்டுரை), கணபதிச்சித்தருடன் சிரியுங்கள். (நகைச்சுவைக் கேள்வி பதில்), நாட்டுக்கருடன் பதில்கள் (வழக்கமான கேள்வி பதில்) மற்றும் ஏராளமான நகைச்சுவை ஆக்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 தனித்துவ மனிதர் திக்கவயல் தர்மகுலசிங்கம், அன்புமணி, தினகரன் வாரமஞ்சரி, சனவரி 22, 2012