சுஷ்மா சேத்

சுஷ்மா சேத் (Sushma Seth) 1936 ஜூன் 20 அன்று பிறந்துள்ள[2] ஒரு இந்திய நாடகம், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். 1950 களில் அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், மற்றும் தில்லி சார்ந்த நாடக குழு "யாத்ரிக்" என்ற நிறுவனத்தின் நிறுவனர் உறுப்பினராக இருந்தார். 1978 ஆம் ஆண்டில் அவரது "ஜூனூன்" திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் ஒரு தாய் மற்றும் பாட்டி பாத்திரத்தில் நடிப்பதற்கு அறியப்பட்டவர், முன்னோடி தொலைக்காட்சித் தொடரான "ஹம் லோக்" என்ற தொடர் மிகவும் புகழ் பெற்ற ஒரு தொடராகும்.[3] ராவ் கோபால் பஜாஜ், மனிஷ் ஜோஷி பிஸ்மில் மற்றும் சந்தர் சேகர் ஷர்மா போன்ற பிரபல இயக்குநர்களுடன் பணிபுரிந்தார்.[4]

சுஷ்மா சேத்
2013இல் சுஷ்மா சேத்
பிறப்பு20 சூன் 1936 (1936-06-20) (அகவை 87)
தில்லி, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1956 முதல் தற்போது வரை [1]
பிள்ளைகள்3
உறவினர்கள்சாரு சிஜா மாத்தூர் (சகோதரி)
ராஜ்குமார் சிங்காஜித் (மைத்துனர்)
திவ்யா சேத் (மகள்)

ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொகு

தில்லியில் வளர்ந்த இவர், பத்மஸ்ரீ விருது பெற்ற ராஜ்குமார் சிங்கஜித் சிங் என்பவரின் மனைவியும் மணிபுரி நடன கலைஞருமான சாரு சிஜா மாத்துரின் மூத்த சகோதரி ஆவார்.[5] இவர் தனது பள்ளிப்படிப்பை திலியில் உள்ளா "கான்வென்ட் ஆப் ஜீசஸ் அன்ட் மேரி" என்ற கள்ளியில் முடித்தார், அட்ன பிறகு, மனையியலில் ஆசிரியர் பட்டயச் சான்றினை தில்லி லேடி இர்வின் கல்லூரியில் முடித்தார். அமெரிக்காவின் பிட்ஸ்பக்கிலுள்ளா கார்னியேஜ் மெலானில் நுண்கலையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். மேலும் நியூ யார்க்கில் பைரகிராப்ட்ஸ் கல்லூரியில் அறிவியலில் பட்டயச் சான்றும் பெற்றுள்ளார்.[6]

சுஷ்மா சேத் மற்றும் அவரது கணவர், தொழிலதிபர் துருவ் சேத் ஆகியோருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.[5] நடிகை திவ்யா சேத், அவரது தாயுடன் "ஹம் லோக்" மற்றும் "தேக் பாய் தேக்" போன்ற படங்களில் நடித்தார்[7]

தொழில் தொகு

1950 களில் நாடக அரங்கங்களில் சேத் தனது தொழிலை தொடங்கினார். ஜாய் மைக்கேல், ரதி பார்த்தலோமிவ், ரோஷன் சேத் மற்றும் பலருடன் இணைந்து நடித்துள்ளார், 1964 ஆம் ஆண்டில் தில்லியைச் சார்ந்த நாடக குழு "யாத்திரி"யின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.[8] நடிப்புடன் கூடுதலாக, அவர் பல நாடகங்களை இயக்கியுள்ளார்.[1] 1970 களில், குழந்தைகளுக்கான "கிரியேட்டிவ் தியேட்டர்" என்பதை நிறுவி, இயங்கினார்.[9]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "Stage plays performed from 1956-1990". பார்க்கப்பட்ட நாள் 6 December 2015.
  2. Saxena-Malvankar, Nidhi (11 August 1995). "Grace personified". Screen Channel. "She's 59 and a grandmother of one".
  3. Sinha, Meenakshi (12 August 2010). "I am still called Hum Log's dadi: Sushma Seth". The Times of India இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811101210/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-12/delhi/28321971_1_dadi-hum-log-hindi-films. 
  4. "Films yes, but she roots for theatre". The Hindu (Chennai, India). 5 February 2007 இம் மூலத்தில் இருந்து 9 பிப்ரவரி 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070209224552/http://www.hindu.com/2007/02/05/stories/2007020504700200.htm. 
  5. 5.0 5.1 Gupta, Monika & Cardozo, William M (May 2008). "The Star Mum". City Cheers.
  6. "Educational Qualifications".
  7. Mishra, Garima (7 July 2009). "An episode in history". இந்தியன் எக்சுபிரசு. http://archive.indianexpress.com/news/an-episode-in-history/485943/0. பார்த்த நாள்: 6 December 2015. 
  8. "Yatril Theatre Group". பார்க்கப்பட்ட நாள் 6 December 2015.
  9. Dhar, Aarti (24 December 2000). "Sushma returns to children". தி இந்து. http://www.thehindu.com/2000/12/25/stories/14252188.htm. பார்த்த நாள்: 7 December 2015. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஷ்மா_சேத்&oldid=3245682" இலிருந்து மீள்விக்கப்பட்டது