சுப்பிரமணியம் நடராஜா (Subramaniam Nadarajah, இறப்பு: 12 பெப்ரவரி 1988) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், இலங்கை செனட் சபை உறுப்பினரும் ஆவார்.

எஸ். நடராஜா
S. Nadarajah
இலங்கை செனட் சபை உறுப்பினர்
பதவியில்
1965–1971
தலைவர், யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபை
பதவியில்
1981–1983
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு(1988-02-12)12 பெப்ரவரி 1988
அரசியல் கட்சிஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழர் விடுதலைக் கூட்டணி
தொழில்வழக்கறிஞர்
இனம்இலங்கைத் தமிழர்

"பொட்டர்" நடராஜா என அழைக்கப்படும் சுப்பிரமணியம் நடராஜா அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் ஒரு மூத்த உறுப்பினர் ஆவார்.[1] 1961 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து பணியாற்றினார்.[2] 1965 முதல் 1971 வரை இலங்கை செனட் சபை உறுப்பினராகப் பணியாற்றினார்.[1]

1981 ஆம் ஆண்டில் மாவட்ட அபிவிருத்தி சபைகள் உருவாக்கப்பட்ட போது யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபைக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] மாவட்ட சபைக்கு "கதிரைகளும் மேசைகளும் வாங்குவதற்குக்கூட" தமக்கு அதிகாரம் தரப்படவில்லை எனக் கூறி தனது பதவியை இவர் 1983 ஆம் ஆண்டில் துறந்தார்.[5][6]

படுகொலை

தொகு

1988 பெப்ரவரி 12 இல் தனது 72 ஆவது அகவையில் நடராஜா யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.[1] இந்திய அமைதி காக்கும் படையினருடன் தொடர்பு பேணியமைக்காக ஈழ இயக்கங்களுள் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இப்படுகொலையை நிகழ்த்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Ex-Senator Killed". Tamil Times VII (4): 4. மார்ச் 1988. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1988.03. பார்த்த நாள்: 2015-04-06. 
  2. டி. பி. எஸ். ஜெயராஜ் (7 மார்ச் 2011). "Satyagraha receives "Baptism of fire" on first day". டெய்லி மிரர் இம் மூலத்தில் இருந்து 2013-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130713152304/http://print2.dailymirror.lk/opinion1/37453-satyagraha-receives-baptism-of-fire-.html. 
  3. Vivekananthan, C. V. (25 ஏப்ரல் 2010). "Sir Pon. Ramanathan was the foster parent of the Sinhalese: Will there ever be a Sinhala Leader a foster parent of the Tamils?". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304060546/http://www.island.lk/2010/04/25/features8.html. 
  4. Sivathasan, S. (5 மே 2013). "Jaffna Development Council Election 1981". த சண்டே லீடர். http://www.thesundayleader.lk/2013/05/05/jaffna-development-council-election-1981/. 
  5. Vivekananthan, C. V. (9 பெப்ரவரி 2003). "Was it the Sinhala leaders who pushed Tamils to call for Eelam". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/030209/columns/cv.html. 
  6. Nesiah, Devanesan (6 அக்டோபர் 2003). "Towards healing and reconciliation". டெய்லி நியூசு இம் மூலத்தில் இருந்து 2005-04-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050407151133/http://www.dailynews.lk/2003/10/06/fea01.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._நடராஜா&oldid=3791581" இலிருந்து மீள்விக்கப்பட்டது