சு. ப. அருணாசலம்

சு.ப. அருணாசலம் (பிறப்பு: சூலை 11, 1959) தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது பள்ளிப் படிப்பை நச்சாந்துபட்டி இராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியிலும், திருச்சி தேசிய கல்லூரி உயர்நிலைப் பள்ளியிலும் கற்றார். பின்பு இளங்கலை வணிகவியல் பட்டத்தை மதுரை மாவட்டம் திருவேடகத்திலுள்ள விவேகானந்தர் கல்லூரியிலும் முதுகலை நிர்வாகவியல் பட்டத்தினை கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.

இலக்கியப் பணி

தொகு

இளவயது முதல் இலக்கிய ஆர்வம் கொண்ட இவர் கல்லூரிக் காலம் தொட்டே Blossom என்ற மாணவர் பத்திரிகையை நடத்தியுள்ளார். அத்தோடு சமூகச் சிந்தனையுள்ள கட்டுரைகளையும், பல நாடகங்களையும் எழுதியுள்ளார். கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவரின் முதல் கவிதை சிங்கை தமிழ் முரசில் வெளிவந்தது. சிங்கப்பூரில் பல பட்டிமன்றங்களில் பங்கேற்று சிறந்த பேச்சாளராகவும், இலக்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.

வகித்த பதவிகள்

தொகு

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும், அதன் பொருளாளராகவும் பதவி வகித்துள்ளார்

உசாத்துணை

தொகு
  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._ப._அருணாசலம்&oldid=2713077" இலிருந்து மீள்விக்கப்பட்டது