சூடான பால்
சூடான பால் (Warm milk) என்பது அறை வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தப்பட்ட பால் ஆகும். இது பொதுவாகக் குழந்தைகளுக்கும், மது அருந்தாதவர்களுக்கும் இரவு நேரப் பானமாகப் பயன்படுத்தப்படுகிறது.[1] இதன் செயல்திறன் சர்ச்சைக்குரியது.[2]
உறக்கத்திற்குமுன் பருகுதல்
தொகுசூடான பால் பொதுவாக மது அருந்தாதவர்கள், குழந்தைகள் மற்றும் மத காரணங்களுக்காக இரவு நேரத் தூக்க உதவியாக அருந்தப்படுகிறது. குளிர்ந்த பாலுடன் ஒப்பிடும்போது பலருக்கு இச்சுவை பிடிக்காது. சூடான பாலுடன் வெண்ணிலா சாறு (45% ஆல்கஹால் கொண்டது) அல்லது தேன் கலந்து பால் பொதுவாக அருந்தப்படுகிறது. வெண்ணிலா சாற்றில் டிரிப்டோபான் எனும் அமினோ அமிலம் உள்ளது. உடலில் மெலடோனின் மற்றும் கால்சியத்தை உருவாக்க இது பயன்படுத்துகிறது.[1] இருப்பினும், கார்போவைதரேட்டு இல்லாமல் டிரிப்டோபான் மூளை-இரத்த தடையைக் கடக்க இயலாது. இரவு தூக்கத்திற்கு முன் சாப்பிடக்கூடாது என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.[1] வெதுவெதுப்பான பால் உண்மையில் குடிப்பவருக்குத் தூக்கத்தை ஏற்படுத்தாது, மாறாக ஓய்வெடுக்க மட்டுமே அவர்களுக்கு உதவும் என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Does Warm Milk Really Help You Sleep Better? | Sleep Advisor". The Sleep Advisor (in அமெரிக்க ஆங்கிலம்). Click Tree Ltd. 2020-01-08. பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.
- ↑ 2.0 2.1 Health, UAMS. "Will drinking warm milk make you sleepy? | UAMS Health". UAMS Health (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.