சூடோகெலிசு அண்ணாமலை

Pseudohelice annamalai
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
மலக்கோசிடுரக்கா
வரிசை:
உள்வரிசை:
குடும்பம்:
வருணிடே
பேரினம்:
இனம்:
சூ. அண்ணாமலை
இருசொற் பெயரீடு
சூடோகெலிசு அண்ணாமலை
(பிரேமா மற்றும் பலர், 2022)

சூடோகெலிசு அண்ணாமலை (Pseudohelice annamalai) என்பது வருணிடே குடும்பத்தில் உள்ள ஒரு நண்டு சிற்றினமாகும். இது இந்தியப் பெருங்கடலில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் வெள்ளாற்றின் முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள பரங்கிப்பேட்டை சதுப்புநிலத்திலிருந்து அண்மையில் பதிவாகியுள்ளது. சூடோகெலிசு பேரினத்தில் காணப்படும் பிற சிற்றினங்கள், சூடோகெலிசு சப்குவாட்ராட்டா மற்றும் சூடோகெலிசு லேட்ரேலி ஆகும்.[1]

விளக்கம்

தொகு

சூடோகெலிசு அண்ணாமலை நண்டின் முதுகு ஓடு அடர் ஊதா நிறத்திலிருந்து அடர் சாம்பல் நிறம் வரை, ஒழுங்கற்ற வெளிர் பழுப்பு, மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது வெள்ளை நிறத் திட்டுகளுடன் பிற சிற்றினங்களிலிருந்து வேறுபடுகின்றது. இடுக்கி கால்கள் வெளிர் பழுப்பு நிறத்தில் காணப்படும். இது அதிகபட்சமாக 20 மி.மீ. அகலம் வரை வளரும். இந்த சிற்றினம் சதுப்புநிலங்களின் சேற்றுக் கரைகளில் வாழ்கிறது. இவற்றின் வளைகள் அவிசெனியா சதுப்புநிலங்களின் காற்று வேர்களுக்கு அருகில் அமைந்துள்ளன. வளைகளின் ஆழம் சுமார் 25 முதல் 30 செ.மீ. வரை இருக்கும். இவை கிளைகளாகவும், நுழைவாயிலைச் சுற்றி பெரிய துகள்களுடன் அமைக்கப்பட்டிருக்கும். மற்ற அலையிடைப்பகுதி நண்டுகளைப் போலல்லாமல், இந்த நண்டு அமைதியாகக் காணப்படும்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Prema M, Hsu JW, Shih HT, Ravichandran S. 2022. First record of the genus Pseudohelice Sakai, Türkay & Yang, 2006 from India and description of a new pseudocryptic species (Crustacea: Brachyura: Varunidae). Zool Stud 61:56. doi:10.6620/ZS.2022.61-56
  2. https://www.thehindu.com/news/national/tamil-nadu/new-species-of-estuarine-crab-discovered-in-cuddalore-named-after-annamalai-university-centenary/article66110524.ece
  3. https://marinespecies.org/aphia.php/aphia.php?p=taxdetails&id=1603678&from=rss
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூடோகெலிசு_அண்ணாமலை&oldid=3601479" இலிருந்து மீள்விக்கப்பட்டது