சூதி (Sudi) என்பது , இந்தியாவின் கர்நாடகாவின் கதக் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியாகும் . இது பாதமியிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலும், கஜேந்திரகாட்டிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் இட்டகி பீமாம்பிகை கோயிலிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இது கி.பி 1000 ஆண்டில் மேலைச் சாளுக்கியர்களின் முக்கியமான நகரமாக இருந்தது. இரட்டைக் கோபுரக் கோயில், மல்லிகார்ச்சுனர் கோயில், நாககுண்டம் (கல் மற்றும் செதுக்கல்களால் கட்டப்பட்ட பெரிய கிணறு), சில கட்டமைப்பு கோயில்கள் போன்ற கற்களால் செதுக்கப்பட்ட அரிய நினைவுச்சின்னங்கள் குறிப்பிடத்தக்கவை. நீண்ட காலமாக இந்த கட்டமைப்புகள் கைவிடப்பட்டன. ஆனால் சமீபத்தில் அவை இந்தியாவின் தொல்பொருள் துறையின் கவனத்தை ஈர்த்துள்ளன.

கல்லில் செதுக்கப்பட்ட பெரிய கணபதி சிலை
நந்தி சிலை

வரலாறு தொகு

இந்நகரம், நவீன கர்நாடகாவில் (குறிப்பாக வடக்கு கர்நாடகா ) மேலைச் சாளுக்கிய கட்டிடக்கலை நடவடிக்கைகளின் முக்கிய பகுதியாக இருந்துள்ளது. கி.பி 1100 இல் சூதி, மேலைச் சாளுக்கியர்களின் தலைநகராக இருந்தது. [1] [2] மன்னரின் மகள் அக்காதேவி அந்த இடத்தை ஆண்டார். அந்த நேரத்தில் இந்த நகரத்தில் நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. [3]

நாணயங்கள் தொகு

மேலைச் சாளுக்கியர்களின் ஆட்சியின் போது (973 - 1189), அலுபாக்களின் ஆட்சிகாலத்தில் கன்னட மற்றும் நாகரி எழுத்து முறையில் பாண்டிய தனம்ஜெயனின் நாணயங்களை அச்சிடப்பட்டது. கதக் மாவட்டத்தில் இலக்குண்டி மற்றும் சூதி ஆகியவை தங்கசாலைகளாக [4] இருந்துள்ளது. கத்யானகா (எடையுள்ள 96 தானியங்கள்), திரம்மா (65 தானியங்கள்), கலஞ்சு (48 தானியங்கள்), காசு (15 தானியங்கள்), மஞ்சாடி (2.5 தானியங்கள்), அக்கம் (1.25 தானியங்கள்) மற்றும் பனா (9.6 தானியங்கள்) போன்றவை முக்கிய நாணயங்களாகும்

சைவம், பாசுபத பள்ளி தொகு

இங்கு சைவ சமயம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.சாளுக்கியர் ஆட்சியின் இறுதி ஆண்டுகளில் சைனம் தனது செல்வாக்கை இழந்தது. சைவத்தின் ஆதிக்கம் தொடர்ந்தது. சைவம், மேலும் பாசுபதம் அல்லது லாகுலா, காலாமுகம் , கபாலிகம் போன்ற பல பிரிவுகளைக் கொண்டிருந்தது. பாசுபதப் பள்ளியானது பல்லிகாவி, சூதி, [5] ஸ்ரீசைலம் போன்ற பிற இடங்களில் முக்கியமான மையங்களைக் கொண்டிருந்தது.

முக்கிய கோயில்கள் தொகு

இரட்டைக் கோபுர சிவன் கோயில் தொகு

இரட்டைக் கோபுரம், இரண்டு விமானம், கொண்ட சிவன் கோயில் இங்கு அமைந்துள்ளது. [6]

பிற்காலச் சாளுக்கிய நினைவுச்சின்னமான இது, 1059-60 க்கு முன், நாகேசுவரனின் தளபதி நாகதேவனால் கட்டப்பட்டது.

மல்லிகார்ச்சுனர் கோயில் தொகு

சூதியில் உள்ள மல்லிகார்ச்சுனர் கோயில் [7] பிற்கால (பொ.ச.1054) சாளுக்கியர்களின் (மேலைச் சாளுக்கியர்) நினைவுச்சின்னமான இது சூதியின் இளவரசி அக்காதேவி ஆளுநரின் கீழ் நிறுவப்பட்டது. இங்கு கற்கலால் செதுக்கப்பட்ட நாககுண்டம் என்ற குளம் ஒன்று அமைந்துள்ளது.

அணுகல் தொகு

கதக்கிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான பெங்களூரிலிருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "No. 15, RON INSCRIPTION OF TURiGAVEDENGA. 387, The Bali-vamsa is mentioned again in an inscription of A.D. 1113 or 1114 at Sudi". பார்க்கப்பட்ட நாள் 2009-03-09.
  2. "Sudi". Archived from the original on 2009-02-02. பார்க்கப்பட்ட நாள் 2009-03-09. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "south indian inscriptions,introduction2, mint at sudi". பார்க்கப்பட்ட நாள் 2009-03-09.
  4. "Indian coinage, Western Chalukyas 973 – 1189 south". பார்க்கப்பட்ட நாள் 2009-03-09.
  5. Ancient Indian History and Civilization. By Sailendra Nath Sen. https://books.google.com/books?id=Wk4_ICH_g1EC&pg=PA392&lpg=PA392&dq=sudi+Chalukya+history&source=bl&ots=4Zu57JzN4t&sig=APpPNxF2CCTXZf_mrUsJPnxlUdY&hl=en&ei=k1W2SYq5L4-Etgeiw9yqCQ&sa=X&oi=book_result&resnum=3&ct=result. பார்த்த நாள்: 2009-03-09. 
  6. "LIst of monuments in India, Sudi". Archived from the original on 1 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-03-09.
  7. "Karnataka Temples". Archived from the original on 2008-12-05. பார்க்கப்பட்ட நாள் 2009-03-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூதி&oldid=3675880" இலிருந்து மீள்விக்கப்பட்டது