விமானம் (கோயில் கட்டடக்கலை)

இந்து கோயில் கருவறை மீது உள்ள கோபுரம்

விமானம் என்பது இந்து கோயில்லகளின் கர்ப்பக்கிருகம் என்னும் உன்னாழிகையின் மீது அமைக்கப்படும் கோபுரத்தைக் குறிப்பிடுவது ஆகும்.[1][2]

விமானம் மற்றும் கோபுரம்

கட்டடக்கலைதொகு

 
புரி புரி ஜெகன்நாதர் கோயில் அமைந்து்ள்ள கலிங்கக் கட்டடக்கலை பாணியிலான விமானம்.

ஆகாஷ் (இந்தி)/விமானம் (தமிழ்)/ஆகாஷா (கன்னடம்/சமசுகிருதம்) என அழைக்கப்படுவது ஆகாயத்தில் உள்ள அனைத்து கிரகங்களிலிருந்தும் ஆற்றலை கிரகித்து ஆகர்சன சக்தியாக மக்களுக்கு எந்த செலவும் இல்லாமல் அளிக்கக்கூடியது என கருதப்படுகிறது. திராவிட பாணியிலான இந்துக் கோயில்களில் பல்வேறுவிதமான கோபுரங்கள் கட்டப்பட்டு இருக்கும். சந்நிதியைச் சுற்றி பொதுவாக பல அடுக்குகளாக பிரகாரச் சுவர்கள் கட்டப்பட்டிருக்கும், பொதுவாக வெளிப்பிரகாரச் சுவரில் நான்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். மூலஸ்தான (முதனைமைத் தெய்வத்தின் கோவில்) கூரை மீது அமைந்துள்ள கோபுரம் விமானம் என அழைக்கப்படுகின்றது. பொதுவாக சில கோயில்களில்தான் இந்த விமான கோபுரங்கள் பிரபலமானவையாக உள்ளன பெரும்பாலும் வெளி கோபுரங்களே புகழ்பெற்றவையாக இருக்கின்றன.

புகழ்வாய்ந்த கோயில்கள்தொகு

 
தங்கத் தகடுகள் வேயப்பட்ட பொன்னம்பல விமானம்

தில்லை நடராசர் கோயிலின் பொன்னம்பலம் (கனக சபை) ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்தக் கோயில் முற்றிலும் தங்க தகடுகளால் வேயப்பட்டிருக்கும், ஆனால் பெரும்பாலான மற்ற கோயில் விமானங்களை ஒப்பிடும்போது அதன் அளவு மற்றும் கட்டமைப்பு வேறுபட்டதாகவும் பெரியதாகவும் இருக்கும். வரலாற்று ஆதாரங்களின்படி தில்லை அம்பலத்தை 9 ஆம் நூற்றாண்டில் முதலாம் பராந்தக சோழன் பொற்தகடுகளால் வேய்ந்தார். இந்த விமானம் இன்றுவரை பெருமை வாய்ந்ததாக உள்ளது.

 
திருமலை வெங்கடாசலபதி கோயிலின் பொன் தகடு வேய்ந்த விமானம்

திருமலை வெங்கடேஸ்வரர் கோவிலின் முதன்மை சந்நிதியின் விமானம் ஆனந்த நிலையம் என்று அழைக்கப்படுகிறது இந்த விமானம் மற்றொரு புகழ்வாய்ந்த விமானத்துக்கு ஒரு முதன்மை எடுத்துக்காட்டாகும்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இரண்டு தங்க விமானங்களைக் கொண்டுள்ளது,[3] ஒன்று சிவனின் கருவறை விமானத்தின் மீதும் மற்றொன்று மீனாட்சி கருவறை மீதும் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை தஞ்சைப் பெருவுடையார் கோயில் விமானமானது மற்றொரு எடுத்துக்காட்டு, இந்த விமானமானது மிக உயரமானது. இது போன்ற விமான அமைப்பு மிக அரியது.

படக்காட்சியகம்தொகு


குறிப்புதொகு

  1. "Glossary". art-and-archaeology. 2007-04-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-02-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. Adam Hardy. Indian temple architecture: form and transformation : the Karṇāṭa Drāviḍa. https://books.google.com/books?id=aU0hCAS2-08C&pg=PA17&lpg=PA17&dq=vimana+architecture&source=bl&ots=2jijqDCzc1&sig=q8VJfvmVtanB85EUsv_xiPjFiyM&hl=en&ei=ymVXTrCIK9HnrAf4iIGJCw&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CEAQ6AEwBA#v=onepage&q=vimana%20architecture&f=false. 
  3. "Towers". 5 ஏப்ரல் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 ஆகஸ்ட் 2021 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=live (உதவி)