சூன் (இசைகேளி)
சூன் (Zune) என்பது மைக்ரோசாப்டின் கையடக்கமான இசைகேளி ஆகும். இதிலும் ஐப்பாடை போல் பாடல்கள், ஒளிப்படங்கள், திரைப்படங்கள் ஆகியனவை பார்க்க உபயோகிக்க முடியும். இதற்கும் மேலாக, இதில் வானொலி வசதியும் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒய்-ஃபை வசதியுடன் இரண்டு சூன் கருவியை இணையாகவும் ("pair") செய்துகொள்ள முடியும். அவ்வாறு செய்யப்பட்ட கருவிகள் தங்களுக்குள்ளே பாடல்கள் மற்றும் படங்களை மாற்றிக்கொள்ள முடியும்.
இந்தக் கருவி, 2006 நவம்பர் 19 இல் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. மைக்குரோசொஃப்ட் நிறுவனம் சூன் இசைகேளிகள் தயாரிப்பதை 2011 அக்டோபர் மாதம் முதல் நிறுத்தியது.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ George Ponder (2011-10-05). "Rising from the ashes, the Zune HD still lives?". Wpcentral.com. பார்க்கப்பட்ட நாள் 2013-02-04.
- ↑ Sheeds. "Zune Hardware stay of execution…..Officially?". Wpdownunder.com. Archived from the original on 2013-02-27. பார்க்கப்பட்ட நாள் 2013-02-04.