சூம்ர வம்சம்

சூம்ர வம்சம் (Soomra dynasty) (சிந்தி மொழி: سومرن جو سلسله‎) என்பது தற்கால பாகிஸ்தானின் சிந்து, பலுசிஸ்தான் மற்றும் இந்தியாவின் குஜராத் பகுதிகளை கி பி 1024 முதல் 1351 முடிய 327 ஆண்டுகள் ஆண்ட அரச குலமாகும்.

சூம்ர வம்சம்
سومرن جو سلسله
கி பி 1024–1351
பேசப்படும் மொழிகள்சிந்தி
குஜராத்தி
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• சூம்ர வம்சத்தின் தொடக்கம்
கி பி 1024
• சூம்ர வம்சத்தின் முடிவு
1351
முந்தையது
பின்னையது
ஹப்பாரி வம்சம்
சம்மா வம்சம்

சூம்ர வம்சத்தினர் இராஜபுத்திர குலத்தின் வழித்தோன்றல்கள் ஆவார்.[1]

கஜினிப் பேரரசர் கஜினி முகமதுவின் மகன் சுல்தான் முதலாம் மசூத்திற்கு (ஆட்சிக் காலம் 1030-1040) எதிராக கிளர்ச்சி செய்து, கஜினிப் பேரரசின் சிந்துப் பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டவர்கள்.

பின்னர் இராஜபுத்திர குல சம்ம வம்சத்தவர்கள் கி பி 1351-இல் சூம்ர வம்சத்தவர்களை வென்று சிந்துப் பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Umedani, Loung V.; Meghwar, Phuloo (2013). "Migratory Aspects of Inhabitants of Indus Valley Civilization- A Historical Perspective". International Research Journal of Art & Humanities (Asianet-Pakistan) 41 (41). ""The two main Rajput tribes of Sindh are: the Samma, descendants of the Samma dynasty who ruled Sindh during (1351 - 1521 A.D); and the Soomra, descendants of the Soomra dynasty who ruled Sindh during (750 - 1350 A.D)."". 
  2. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூம்ர_வம்சம்&oldid=2245636" இலிருந்து மீள்விக்கப்பட்டது