சூயம்
சூயம் அல்லது சிய்யம் தமிழில் சுழியம் என்பது தென்னிந்திய இனிப்பு வகைகளுள் ஒன்றாகும்.[1] இவ்வகை பண்டமானது பிராமணர்களால் தெவசம் கொடுக்கும் நாட்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டுவந்தது. அதன் பிறகு தமிழகத்தின் சிற்றூர் கடைகளிலும் சாதாரணமாக செய்து விற்க கூடிய ஒரு இனிப்பு வகை பலகாரமாக உள்ளது.
வகைகள்
தொகு- சுழியம் இனிப்பு மற்றும் காரம் என இரு முறைகளில் செய்யபடுகின்றது.[2]
- மேலும் காரத்தை விட இனிப்பு வகையே அதிகமாக விரும்பி செய்யபடுகின்றது.
தேவையான பொருட்கள்
தொகு1. பச்சரிசி மாவு 200 கிராம் 2. பாசிப்பயறு 250 கிராம் 3. வெல்லம் 250 கிராம் 4. ஏலக்காய் தேவையான அளவு 5. சுக்குப் பொடி 5 கிராம் 6. நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் தேவையான அளவு[3]
இனிப்பு சுழியம்
தொகுபூரணம் பாசிப்பருப்பு[4], கடலைப் பருப்பு அல்லது துவரம் பருப்பு ஆகிய பருப்புகளுள் ஏதேனும் ஒன்றால் செய்யப்படுகிறது. பாசிப்யற்றில் பூரணம் செய்வதாக இருந்தால் அதை வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னார் நன்கு ஆறவிட்டு மிக்சியில் போட்டு பொடிசெய்து கொள்ள வேண்டும். வெல்லத்தை பாகுசெய்து கொள்ள வேண்டும். இப்பாகுடன் சுக்குப் பொடி, ஏலக்காய் பொடிசெய்து கலந்து பாசிப்பயறு மாவினைக் கெட்டியாக கலந்து கொண்டு நாட்டு நெல்லிகாய் அளவு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பச்சரிசி மாவினை கொழ கொழப்பாக நீர் விட்டு கலந்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெயை விட்டு சூடானதும் பாசிப்பயறு மாவு உருண்டைகளை பச்சரிசி உளுந்து மாவில் மூழ்கி எடுத்து இட்டு பொன் நிறமாக வேகவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
காரச்சுழியம்
தொகுவெல்லத்திற்கு பதில் கார வகை பூரணத்திற்கு உண்டான சமையல் மூல பொருட்களாக சேர்த்துக்கொள்ளலாம்
சத்துக்கள்
தொகுபுரதம், மாவுச்சத்து, உயிர்ச்சத்துக்கள் நிறைந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chettinad Sweet Suyyam". பார்க்கப்பட்ட நாள் 2022-03-17.
- ↑ "சுசியம்". arusuvai (in ஆங்கிலம்). 2012-08-24. Archived from the original on 2021-12-06. பார்க்கப்பட்ட நாள் 2022-03-17.
- ↑ Venkatachalam, Sowmya (2014-10-01). "Suiyam recipe, Suyyam, Sweet Suzhiyan, Suzhiyam". Subbus Kitchen (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-17.
- ↑ https://cookpad.com/in-ta/recipes/13519086-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE-paasipayaru-suyam-recipe-in-tamil