சூரஜ்குண்டு மேளா
சூரஜ்குண்டு மேளா என்பது கலைப்பொருட்களை காட்சிப்படுத்தும் விழாவாகும். இந்த திருவிழா இந்திய மாநிலமான அரியானாவிலுள்ள சூரஜ்குண்டு என்ற இடத்தில் நடைபெறும். இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரியின் முதல் இரண்டு வாரங்களுக்கு நடக்கிறது. நாட்டுப்புறப் பாடகர்களும், நடனக் கலைஞர்களும் கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதை பார்க்க ஆண்டுதோறும் ஆயிரக்கணாக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். உள்ளூர் மக்களின் கைவண்ணத்தில் செய்யப்படும் கலைப்பொருட்களும், கைவினைப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. அத்துடன் பல்வேறு வகையான உணவுவகைகளும் பரிமாறப்படுகின்றன.[1]
கருப்பொருள்
தொகுஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய மாநிலத்தை முன்னிறுத்தி விழா நடத்தப்படும்.[2] ஆண்டு வாரியாக முன்னிறுத்தப்பட்ட மாநிலங்களின் பட்டியலை கீழே காண்க.
ஆண்டு | மாநிலம் |
---|---|
1987 | ----- |
1988 | ----- |
1989 | ராஜஸ்தான் |
1990 | மேற்கு வங்காளம் |
1991 | கேரளம் |
1992 | மத்தியப் பிரதேசம் |
1993 | ஒடிசா |
1994 | கர்நாடகம் |
1995 | பஞ்சாப் |
1996 | இமாச்சலப் பிரதேசம் |
1997 | குஜராத் |
1998 | வடகிழக்கு மாநிலங்கள் |
1999 | ஆந்திரப் பிரதேசம் |
2000 | ஜம்மு காஷ்மீர் |
2001 | கோவா |
2002 | சிக்கிம் |
2003 | உத்தராகண்ட் |
2004 | தமிழ்நாடு |
2005 | சத்தீஸ்கர் |
2006 | மகாராஷ்டிரா |
2007 | ஆந்திரப் பிரதேசம் |
2008 | மேற்கு வங்காளம் |
2009 | மத்தியப் பிரதேசம் |
சான்றுகள்
தொகு- ↑ Surajkund International Crafts Mela - Haryana Tourism (ஆங்கிலத்தில்)
- ↑ राजस्थान होगा दूसरी बार सूरजकुंड मेले का थीम स्टेट (இந்தியில்) | ஹிந்துஸ்தான் லைவ் | 23 அக்டோபர் 2010