சூரியச் சுழற்சி 14

சூரியச் சுழற்சி 14(Solar cycle 14) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட பதினான்காவது சுழற்சியாகும்[1][2]. இச்சுழற்சி 1902 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி 1913 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் வரையில் 11.5 ஆண்டுகளுக்கு நீடித்ததது. பனிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 14 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 64.2 எண்ணிக்கையும் (பிப்ரவரி 1906) குறைந்த பட்சமாக 1.5 எண்ணிக்கையுமாக கணக்கிடப்பட்டது[3]. இச்சுழற்சிக் காலத்தில் அறியப்பட்ட அதிகப்பட்சமானது டால்டன் குறைந்தபட்சத்திற்குப் பின்னர் எற்பட்ட குறைவான எண்ணிக்கையாகும். மேலும், இச்சுழற்சிக் கலத்தில் தோராயமாக 1019 நாட்கள் சூரியப்புள்ளிகள் எதுவும் காணப்படாமல் இருந்ததாக கணக்கிடப்பட்டது.இந்த அளவு சூரியச் சுழற்சிகளில் இரண்டாவது அதிகப்பட்ச அளவாகும்.[4][5][6]

சூரியச் சுழற்சி 14
சூரியச் சுழற்சி பதினான்கு காலத்தில் தெரிந்த சில சூரியப் புள்ளிகள் (1904).
சூரியப்புள்ளித் தரவு
தொடக்க நாள்பிப்ரவரி 1902
இறுதி நாள்ஆகத்து 1913
காலம் (வருடங்கள்)11.5
அதிக கணிப்பு64.2
அதிக கணிப்பு மாதம்பிப்ரவரி 1906
குறைந்த கணிப்பு1.5
Spotless days1019
சுழற்சிக் காலம்
முன் சுழற்சிசூரியச் சுழற்சி 13 (1890-1902)
அடுத்த சுழற்சிசூரியச் சுழற்சி 15 (1913-1923)
சூரியச் சுழற்சி பதினான்கின் போது (21 ஆகத்து 1909) இல் தோன்றிய சூரியத் துறுத்து.

பதினான்காவது சூரியச் சுழற்சிக் காலத்தில் 1903 நவம்பர், மார்ச்சு 1905 மற்றும் செப்டம்பர் 1909 ஆம் ஆண்டுகளில் புவிக்காந்தப் புயல்கள் தொலைவரிச் செய்தி அனுப்பும் திட்டத்தைப் பாதித்தன.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Kane, R.P. (2002). "Some Implications Using the Group Sunspot Number Reconstruction பரணிடப்பட்டது 2012-12-04 at Archive.today". Solar Physics 205(2), 383-401.
  2. "The Sun: Did You Say the Sun Has Spots?". Space Today Online. பார்க்கப்பட்ட நாள் 12 August 2010.
  3. SIDC Monthly Smoothed Sunspot Number. "[1] பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்"
  4. Spotless Days. "[2]"
  5. What's Wrong with the Sun? (Nothing) more information: Spotless Days. "[3] பரணிடப்பட்டது 2008-07-14 at the வந்தவழி இயந்திரம்"
  6. Solaemon's Spotless Days Page. "[4] பரணிடப்பட்டது 2017-07-22 at the வந்தவழி இயந்திரம்"
  7. http://www.solarstorms.org/SRefStorms.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_14&oldid=3792151" இலிருந்து மீள்விக்கப்பட்டது