சூரியச் சுழற்சி 2

சூரியச் சுழற்சி 2 (Solar cycle 2) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட இரண்டாவது சுழற்சியாகும்.[1][2] இச்சுழற்சி 1766 ஆம் ஆண்டு சூன் மாதம் தொடங்கி 1775 ஆம் ஆண்டு சூன் மாதம் வரையில் 9 ஆண்டுகளுக்கு நீடித்ததது. பனிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 2 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 115.8 எண்ணிக்கையும் (செப்டம்பர் 1769) குறைந்த பட்சமாக 7.2 எண்ணிக்கையுமாக கணக்கிடப்பட்டது[3].

சூரியச் சுழற்சி 2
வில்சன் விளைவை விளக்கும் 1774 ஆம் ஆண்டின் சூரியப்புள்ளி படம்
சூரியப்புள்ளித் தரவு
தொடக்க நாள்சூன் 1766
இறுதி நாள்சூன் 1775
காலம் (வருடங்கள்)9
அதிக கணிப்பு115.8
அதிக கணிப்பு மாதம்செப்டம்பர் 1769
குறைந்த கணிப்பு7.2
சுழற்சிக் காலம்
முன் சுழற்சிசூரியச் சுழற்சி 1 (1755-1766)
அடுத்த சுழற்சிசூரியச் சுழற்சி 3 (1775-1784)

சூரியச் சுழற்சி இரண்டின் காலத்தில் சூரியப் புள்ளிகளை உற்றுநோக்கிய அலெக்சாண்டர் வில்சன் வில்சன் விளைவைத் தோற்றுவித்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Kane, R.P. (2002). "Some Implications Using the Group Sunspot Number Reconstruction பரணிடப்பட்டது 2012-12-04 at Archive.today". Solar Physics 205(2), 383-401.
  2. "The Sun: Did You Say the Sun Has Spots?". Space Today Online. பார்க்கப்பட்ட நாள் 12 August 2010.
  3. SIDC Monthly Smoothed Sunspot Number. "[1] பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்"
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_2&oldid=3792441" இலிருந்து மீள்விக்கப்பட்டது