சூரியச் சுழற்சி 3
சூரியச் சுழற்சி 3 (Solar cycle 3) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட மூன்றாவது சுழற்சியாகும்[1][2] . இச்சுழற்சி 1775 ஆம் ஆண்டு சூன் மாதம் தொடங்கி 1784 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் 9.3 ஆண்டுகளுக்கு நீடித்ததது. பனிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 2 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 158.5 எண்ணிக்கையும் (மே1778) குறைந்த பட்சமாக 9.5 எண்ணிக்கையுமாக கணக்கிடப்பட்டது[3] . அதிகப்பட்ச கணிப்பான 158.5 என்பது சூரியச் சுழற்சி 22 ஐ ஒத்திருக்கிறது. சூலை 1989 இல் நிகழ்ந்த இம்மாறுபாடு மூன்றாவது முறையாக ஏற்பட்ட அதிகப்பட்ச கணக்கீட்டுக்குச் சமமாகும்[4]
சூரியச் சுழற்சி 3 | |
---|---|
சூரியப்புள்ளித் தரவு | |
தொடக்க நாள் | சூன் 1775 |
இறுதி நாள் | செப்டம்பர் 1784 |
காலம் (வருடங்கள்) | 9.3 |
அதிக கணிப்பு | 158.5 |
அதிக கணிப்பு மாதம் | மே 1778 |
குறைந்த கணிப்பு | 9.5 |
சுழற்சிக் காலம் | |
முன் சுழற்சி | சூரியச் சுழற்சி 2 (1766-1775) |
அடுத்த சுழற்சி | சூரியச் சுழற்சி 4 (1784-1798) |
இச்சுழற்சிக் காலத்தில் வில்லியம் எர்செல் சூரியப் புள்ளிகளை உற்று நோக்கினார்[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kane, R.P. (2002). "Some Implications Using the Group Sunspot Number Reconstruction பரணிடப்பட்டது 2012-12-04 at Archive.today". Solar Physics 205(2), 383-401.
- ↑ "The Sun: Did You Say the Sun Has Donuts?". Space Today Online. பார்க்கப்பட்ட நாள் 12 August 2010.
- ↑ SIDC Monthly Smoothed Sunspot Number. "[1] பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்"
- ↑ Wilson, Robert M.; Hathaway, David H.; Reichmann, Edwin J. (August 1996). On the Importance of Cycle Minimum in Sunspot Cycle Prediction (NASA Technical Paper 3648) (PDF).
- ↑ Vaquero, J.M.; Vázquez, M. (2009). The Sun Recorded Through History. Springer. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0387927905.