சூரியனார் கோயில் ஆதீன பரம்பரை

சைவ சித்தாந்தப் பரம்பரைகள் இரண்டு. ஒன்று தருமபுர ஆதீன பரம்பரை. மற்றொன்று இந்தச் சிவாக்கிர யோகிகள் பரம்பரை. சிவாக்கிர யோகிகள் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழிலும் வடமொழியிலும் நூல்கள் பல இயற்றியவர். இந்தச் சிறப்புப் பற்றி இவருக்கு முன்னும் பின்னும் வாழ்ந்தவர்களை இவரது பெயரால் பரம்பரை எனக் குறிப்பிடலாயினர். இவருக்குச் சிவக்கொழுந்து சிவாசாரியார் என்ற பெயரும் உண்டு. இவர் வேளாளர் மரபில் வந்தவர்.

இந்தப் பரம்பரைக்கு வழங்கும் வேறு பெயர்கள்:

திருக்கயிலாய பரம்பரை - தரும்புர ஆதீனப் பரம்பரையும் இப்பெயரால் குறிப்பிடப்படும்.
கந்தனிடம் உபதேசம் பெற்றதால் 'கந்த பரம்பரை'
வாமதேவர் மூலம் நிலவுலகில் தோன்றியமையால் வாமதேவ பரம்பரை
சதாசிவ பரம்பரை - சதாசிவ சிவாசியார் உபதேசத்தால் பெற்ற பெயர்.

சந்தான வரிசை

தொகு

இரண்டு பரம்பரைக்கும் உபதேசம் பெற்ற சந்தான வரிசை வேறு. இவர்கள் வாழையடி வாழையாக அவரவர் குருவிடம் ஞானம் பெற்றவர்கள்.

சூரியனார் கோயில் ஆதீனம்

தொகு

சூரியனார் கோயிலுக்கு ஓர் ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனம் சிவக்கொழுந்து தேசிகர் என்னும் சிவாக்கிர யோகியால் தோற்றுவிக்கப்பட்டது.[1][2] இவருக்கு முன்னரும் இந்தக் கோயிலுக்குப் பரம்பரை உண்டு என்று காட்டுகின்றனர். 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பரம்பரை இன்றும் தொடர்கிறது. பரம்பரை வரிசை சில குறிப்புகளுடன் வரிசைப்படுத்தி இங்குக் காட்டப்படுகிறது

எண் பெயர் குறிப்பு
1 ஸ்ரீ கண்ட பரமசிவம்
2 ஸ்ரீ ஸ்கந்தகுரு
3 ஸ்ரீலஸ்ரீ வாமதேவ முனிவர்
4 ஸ்ரீலஸ்ரீ நீலகண்ட சிவாசாரியார்
5 ஸ்ரீலஸ்ரீ விசுவேசுவர சிவாசாரியார்
6 ஸ்ரீலஸ்ரீ சதாசிவ சிவாசாரியார்
7 ஸ்ரீலஸ்ரீ சிவமார்க்கப் பிரகாச தேசிகர்
8 ஸ்ரீலஸ்ரீ ஆதி சிவாக்கிர யோகிகள் ஆதீன நிறுவனர்
9 ஸ்ரீலஸ்ரீ வீழிச் சிவாக்கிர யோகிகள் வடமொழி, தமிழ்மொழி இரண்டிலும் பல நூல்கள் செய்தவர்
10 ஸ்ரீலஸ்ரீ நந்தி சிவாக்கிர யோகிகள் சிவநெறிப் பிரகாச உரை, சிவப்பிரகாச உரை ஆகிய உரைநூல்களை இயற்றிவர்
11 ஸ்ரீலஸ்ரீ சிவக்கொழுந்து தேசிகர்
12 ஸ்ரீலஸ்ரீ சொக்கலிங்க தேசிகர்
13 ஸ்ரீலஸ்ரீ சிதம்பரநாத தேசிகர்
14 ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க தேசிகர்
15 ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிகர்
16 ஸ்ரீலஸ்ரீ நமசிவாய தேசிகர்
17 ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகர்
18 ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர்
19 ஸ்ரீலஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர்
20 ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேசிகர்
21 ஸ்ரீலஸ்ரீ மீனாட்சிசுந்தர தேசிகர்
22 ஸ்ரீலஸ்ரீ சிவக்கொழுந்து தேசிகர்
23 ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார தேசிகர்
24 ஸ்ரீலஸ்ரீ வேலாயுத தேசிகர்
25 ஸ்ரீலஸ்ரீ சிவகுருநாத தேசிகர்
26 ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி தேசிகர்
27 ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள்
28 ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள்

மேலும் காண்க

தொகு

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. இதனால் இதனைச் சிவாக்கிர யோகிகள் பரம்பரை என்றும் வழங்குவர்.
  2. கந்தனை முன்னிலைப்படுத்தி வளர்வதால் இதனைக் 'கந்த பரம்பரை' எனவும் கூறுவர்.