சூர்யகாந்த் ஆச்சார்யா
சூர்யகாந்த் ஆச்சார்யா (9 திசம்பர் 1929 - 21திசம்பர் 2009) பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் குசராத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் ஆவார்.[1]
சூர்யகாந்த் ஆச்சார்யா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 19 ஆகத்து 2005 – 21 திசம்பர் 2009 | |
பின்னவர் | பிரவின் நாயக் |
தொகுதி | குசராத்து |
துணைத்தலைவர், மாநிலத் திட்டக்குழு, குசராத்து | |
பதவியில் சூன் 1998 – சனவரி 2003 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூர்யகாந்த் ஆச்சார்யா 12 திசம்பர் 1929 ஜூனாகத், ஜூனாகத் அரசு, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 21 திசம்பர் 2009 ஜூனாகத், குசராத்து, இந்தியா | (அகவை 80)
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (1980-2009) |
பிற அரசியல் தொடர்புகள் | பாரதீய ஜனசங்கம் (1957-1977) ஜனதா கட்சி (1977-1980) |
துணைவர் | கேமாபென் ஆச்சாரியா |
வாழிடம்(s) | துப்டி மனை, தாட்டார் சாலை, ஜூனாகத் மாவட்டம், குசராத்து |
இவர் குசராத்து மாநிலத்திலிருந்து 2005[2] முதல் 2011 வரையிலான மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, இந்திய மாநிலங்கள் குழுவின் நாடாளுமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சூன் 1998 முதல் சனவரி 2003 வரை குஜராத்தின் மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருந்தார்.
இவர் 1975-80 காலகட்டத்தில் குசராத்து மாநிலத்தில் சுகாதார அமைச்சராக இருந்த ஹேமாபென் ஆச்சார்யாவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "BJP MP Suryakant Acharya passes away". NetIndian. 21 December 2009. பார்க்கப்பட்ட நாள் 26 April 2018.
- ↑ "Suryakantbhai Acharya Former Member Of Parliament (RAJYA SABHA)". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 30 October 2017.
- ↑ "Gujarat BJP Rajya Sabha MP Suryakant Acharya passes away". DeshGujarat. பார்க்கப்பட்ட நாள் 30 October 2017.