சூலனூர் மயில்கள் சரணாலயம்

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பறவைகள் சரணாலயம்

சூலனூர் மயில்கள் சரணாலயம் (Choolannur Pea Fowl Sanctuary) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டம், சூலனூரில் உள்ள ஒரு பறவைகள் சரணாலயம் ஆகும். இந்த சரணாலயம் அமைந்துள்ள இடம் உள்ளூரில் மயிலாடும்பாறை என்று அறியப்படுகிறது. இதன் பொருள் "மயில்கள் நடனமாடும் பாறை" என்பதாகும். 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, கேரளத்தில் உள்ள மயில்கள் சரணாலயம் இதுமட்டுமேயாகும்.

சூலனூர் மயில்கள் சரணாலயம்
அமைவிடம்பாலக்காடு மாவட்டம், கேரளம், இந்தியா
ஆள்கூறுகள்10°42′52″N 76°28′20″E / 10.71444°N 76.47222°E / 10.71444; 76.47222
பரப்பளவு5 km2 (1.9 sq mi)
நிறுவப்பட்டது2007
நிருவாக அமைப்புகேரள அரசு வனத்துறை

வரலாறு

தொகு

அரசு ஆணை எண் G. O.(P) 24/2007/F&WLD இன் படி, சூலன்னூர் மயில்கள் சரணாலயம் 15 மே 2007 அன்று நிறுவப்பட்டது.[1]

விளக்கம்

தொகு

கேரளத்தின், பாலக்காடு மாவட்டம், சூலனூர் சிற்றூரில் மயில்கள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் உள்நாட்டில் மயிலாடும்பாறை என்று அழைக்கப்படுகிறது, இதன் பொருள் "மயில்கள் நடனமாடும் பாறை" என்பதாகும்.[2] இந்த பறவைகள் சரணாலயம் பீச்சி வனக் கோட்டத்தின் அதிகார வரம்பின் கீழ் வருகிறது. புகழ்பெற்ற இந்திய பறவையியல் வல்லுநரும் எழுத்தாளருமான இந்துசூடனின் நினைவாக இந்த சரணாலயம் நிறுவப்பட்டது.[3]

மயில்கள் சரணாலயம் 5 km2 (1.9 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது.[4] மயில்கள் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான பறவை இனங்களையும் இங்கு காண இயலும்.[4] 2022 வரை, கேரளாவில் உள்ள ஒரே மயில் சரணாலயம் இதுவாகும்.[4]

சமூகமும், பண்பாடும்

தொகு

ஆண் மயில்கள் இனச்சேர்க்கை செய்வதில்லை என்றும், ஆண் மயில்களின் கண்ணீரைக் குடித்து பெண் மயில்கள் கருத்தரிக்கின்றன என்றும் இராசத்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு மயில் சரணாலயத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "WILDLIFE SANCTUARIES, NATIONAL PARKS, OTHER PROTECTED AREAS AND BIOSPHERE RESERVES". forest.kerala.gov.in.
  2. "Choolannur; The lesser known sanctuary for the national bird of India". Tourism News Live (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-03-13. பார்க்கப்பட்ட நாள் 2022-05-25.
  3. "കേരളത്തിലെ ഏക മയിൽ സംരക്ഷണ കേന്ദ്രമായ ചൂളന്നൂർ മയിൽ സങ്കേതത്തിലേക്ക് ഒരു യാത്രയായാലോ !". Sathyam Online (in மலையாளம்). 2022-05-05. பார்க்கப்பட்ட நாள் 2022-05-25.
  4. 4.0 4.1 4.2 "മയിലാടുംപാറ :കേരളത്തിലെ ഏക മയിൽ സങ്കേതം കേരള വിനോദ സഞ്ചാര വകുപ്പ്". www.keralatourism.org (in மலையாளம்). Department of tourism, Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 2022-05-25.
  5. "ജഡ്ജിയുടെ പരാമർശത്തിന് ശേഷം മയിലുകൾ ഇണചേരുന്നത് കാണാൻ വൻതിരക്ക്". Samayam Malayalam (in மலையாளம்). The times of India. பார்க்கப்பட்ட நாள் 2022-05-25.