சூல் கண்காட்சி

துலேதி தினத்தில் (ஹோலியின் இரண்டாம் நாள்) நடைபெறும் ஆன்மீக திருவிழா

குஜராத்தில் உள்ள கர்படா தாலுகாவின் கங்கர்டி மற்றும் ஜலோட் தாலுகாவின் ராணியார் கிராமத்தில் துலேதி தினத்தில் ( ஹோலியின் இரண்டாம் நாள்) இந்த  (சூல் கண்காட்சி) தீமிதி திருவிழா நடைபெறுகிறது. சூல் என்ற சொல்லிற்கு தீ அடுப்பு என்று அர்த்தமாகும். [1] [2] பஞ்சமஹால், பருச் மற்றும் வதோதரா மாவட்டங்களின் பழங்குடியினரும் துலேதி நாளில் இந்த தீமிதி திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். [3]

நேரம்

தொகு

மார்கழி (ஆங்கில மார்ச் மாதம்) மாதத்தில் இந்த தீமிதி திருவிழா நடைபெறுகிறது. [4]

முக்கியத்துவம்

தொகு

இந்த தீமிதி கண்காட்சியில் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் காலையில் இருந்து மதியம் வரை  கூடுவார்கள். இக்கண்காட்சியின்  சடங்கு என்னவென்றால், ஒரு அடி அகலமும், ஐந்தடி முதல் ஆறு அடி நீளமும் கொண்ட பெரிய குழி தோண்டி தயார் செய்யப்படுகிறது. பின்னர் அந்தக் குழியில் அகாசியா மரத்தின் பெரிய துண்டுகள் ( கரி ) எரிக்கப்பட்டு தீக்கங்குகளாக மாற்றப்படுகிறது. [5]

நியூஸ் பிளஸ் குஜராத்தியின் படி, 'தீமிதி கண்காட்சி என்பது பொழுதுபோக்கு மற்றும் புத்துணர்ச்சி மட்டுமல்ல, மத நம்பிக்கைகளும் ஆன்மிக நம்பிக்கைகளும் கொண்டது. [6]

இந்தச் சந்தர்ப்பத்தில் பழங்குடியின மக்கள் அனைவரும் வெறுங்காலுடன் தீக்கங்குகளின் மீது ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஏழு முறையாக, ஒரு தேங்காய் மற்றும் ஒரு குடம் தண்ணீரைக் கைகளில் எடுத்துச் செல்கிறார்கள். ஏழு முறை அந்த தீக்கங்குகளை கடந்த பின்னர்  அக்னிதேவரை வணங்கி கைகளில் வைத்துள்ள தேங்காயை இறைவன் முன்பாக உடைத்து பலியாக செலுத்துவார்கள். [7] [8]

பழங்குடியினர் தங்கள் தெய்வத்தை நம்பிக்கையுடன் நினைவுகூர்ந்து, எரியும் தீக்கங்குகளின் மீது வெறுங்காலுடன் நடக்கிறார்கள், இருப்பினும் அவர்களின் கால்கள் அவர்களின் நம்பிக்கையின் காரணமாக சுடுவதில்லை. இந்த பழங்குடி மக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பிற்காக அக்னிதேவ் இறைவனின் பாதுகாப்பை வேண்டி இப்படியாக வணங்குகிறார்கள் . [9] [10]

தீக்கங்குகளை கடப்பதற்கு முன்பதாக ஆண்களும் சிறுவர்களும் தங்கள் உடலில் மஞ்சளைத் தேய்க்கிறார்கள். கண்களில் கோலிரியம் மற்றும் கன்னங்களில் கருப்பு புள்ளிகள் கூட தேய்க்கிறார்கள். பெண்களும் தங்கள் குழந்தைகளுடன் குட்டையான மஞ்சள் அல்லது பச்சை நிறங்களில் ரவிக்கை மற்றும் சிவப்பு நிற ஒட்னி ( துப்பட்டா அல்லது சன்னி) அணிந்து வருகிறார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கைகளில் வாள் மற்றும் தடிகளுடன் மேள தாளத்திற்கு ஏற்ப ஆடுகிறார்கள். [11] அந்தந்த பழங்குடி குழுக்களில் உள்ளவர்கள் இந்த தீமிதி திருவிழாவில் சாப்பிட்டு, ஆடி , பாடி குடித்து மகிழ்கின்றனர். [12]

காவல் துறையால் தீமிதி திருவிழாவிற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து பாதுகாப்பு பராமரிக்கப்படுகிறது. [13]

மேற்கோள்கள்

தொகு
  1. ગુજરાતના લોકોત્સવો અને મેળા.
  2. Samay, NavGujarat (11 March 2020). "ધગધગતા અંગારા પર ખુલ્લા પગલે ચાલીને માનતા પૂરી કરાય છે ચુલના મેળામાં". NavGujarat Samay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 December 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. ગુજરાતની લોકસંસ્કૃતિક વિરાસત.
  4. "ગરબાડા તાલુકાના ગાંગરડી ગામે ચુલનો મેળો ભરાયો. | Gangardi Chul Melo 2020 | ગાંગરડી ચુલ મેળો – YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 7 December 2020.
  5. Jadav, Joravarsinh (2010). ગુજરાતની લોકસંસ્કૃતિક વિરાસત. Gandhinagar: Directorate of Information/ GujaratState. p. 181.Jadav, Joravarsinh (2010). ગુજરાતની લોકસંસ્કૃતિક વિરાસત. Gandhinagar: Directorate of Information/ GujaratState. p. 181.
  6. "ગરબાડા તાલુકાના ગાંગરડી ગામે ચુલનો મેળો ભરાયો. | Gangardi Chul Melo 2020 | ગાંગરડી ચુલ મેળો – YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 7 December 2020."ગરબાડા તાલુકાના ગાંગરડી ગામે ચુલનો મેળો ભરાયો. | Gangardi Chul Melo 2020 | ગાંગરડી ચુલ મેળો – YouTube". www.youtube.com. Retrieved 7 December 2020.
  7. ગુજરાતની લોકસંસ્કૃતિક વિરાસત.Jadav, Joravarsinh (2010). ગુજરાતની લોકસંસ્કૃતિક વિરાસત. Gandhinagar: Directorate of Information/ GujaratState. p. 181.
  8. Samay, NavGujarat (11 March 2020). "ધગધગતા અંગારા પર ખુલ્લા પગલે ચાલીને માનતા પૂરી કરાય છે ચુલના મેળામાં". NavGujarat Samay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 December 2020.[தொடர்பிழந்த இணைப்பு]Samay, NavGujarat (11 March 2020). "ધગધગતા અંગારા પર ખુલ્લા પગલે ચાલીને માનતા પૂરી કરાય છે ચુલના મેળામાં"[தொடர்பிழந்த இணைப்பு]. NavGujarat Samay. Retrieved 7 December 2020.
  9. ગુજરાતની લોકસંસ્કૃતિ.
  10. Samay, NavGujarat (11 March 2020). "ધગધગતા અંગારા પર ખુલ્લા પગલે ચાલીને માનતા પૂરી કરાય છે ચુલના મેળામાં". NavGujarat Samay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 December 2020.[தொடர்பிழந்த இணைப்பு]Samay, NavGujarat (11 March 2020). "ધગધગતા અંગારા પર ખુલ્લા પગલે ચાલીને માનતા પૂરી કરાય છે ચુલના મેળામાં"[தொடர்பிழந்த இணைப்பு]. NavGujarat Samay. Retrieved 7 December 2020.
  11. ગુજરાતના લોકોત્સવો અને મેળા.Kalariya, Ashok (2019–20). ગુજરાતના લોકોત્સવો અને મેળા. Gandhinagar: Directorate of Information/ GujaratState. pp. 50–51.
  12. Samay, NavGujarat (11 March 2020). "ધગધગતા અંગારા પર ખુલ્લા પગલે ચાલીને માનતા પૂરી કરાય છે ચુલના મેળામાં". NavGujarat Samay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 December 2020.[தொடர்பிழந்த இணைப்பு]Samay, NavGujarat (11 March 2020). "ધગધગતા અંગારા પર ખુલ્લા પગલે ચાલીને માનતા પૂરી કરાય છે ચુલના મેળામાં"[தொடர்பிழந்த இணைப்பு]. NavGujarat Samay. Retrieved 7 December 2020.
  13. Samay, NavGujarat (11 March 2020). "ધગધગતા અંગારા પર ખુલ્લા પગલે ચાલીને માનતા પૂરી કરાય છે ચુલના મેળામાં". NavGujarat Samay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 December 2020.[தொடர்பிழந்த இணைப்பு]Samay, NavGujarat (11 March 2020). "ધગધગતા અંગારા પર ખુલ્લા પગલે ચાલીને માનતા પૂરી કરાય છે ચુલના મેળામાં"[தொடர்பிழந்த இணைப்பு]. NavGujarat Samay. Retrieved 7 December 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூல்_கண்காட்சி&oldid=3687055" இலிருந்து மீள்விக்கப்பட்டது