செக்ரா கான்
செக்ரா கான் (Zehra Khan) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிற்சங்கவாதியும் ஆர்வலருமாவார். [1] [2] வீட்டு அடிப்படையிலான பெண் தொழிலாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக உள்ளார். [3] [4] சிந்து குறைந்தபட்ச ஊதிய வாரியம், சிந்து முத்தரப்பு தொழிலாளர் நிலைக்குழு, சிந்து தொழில் மற்றும் சுகாதார மன்றம் , சிந்து வீட்டு அடிப்படை பெண் தொழிலாளர்கள் ஆளும் குழு உள்ளிட்ட பல முத்தரப்பு குழுக்களில் உறுப்பினராக உள்ளார்.
செக்ரா கான் Zehra Khan | |
---|---|
வீடு சார்ந்த பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2009 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | பாக்கித்தானியர் |
கல்வி | பாலினப் படிப்பில் முதுநிலை மற்றும் ஆடை மற்றும் நெசவுத் துறையில் இளநிலை |
தொழில்
தொகுகான் மகளிர் ஆய்வுத் துறையின் மாணவியாக இருந்தபோது, வீட்டு அடிப்படையிலான பணியாளர்களின் பங்களிப்புகளைப் பற்றி அறிந்து கொண்டார், தனது முதுகலை ஆய்வறிக்கைக்கான பாடத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டார். [5] [6] ஆய்வில், இந்த தொழிலாளர்களைப் பாதுகாக்கக்கூடிய சட்ட உரிமைகளின் அவசியத்தை உணர்ந்தார். [7] [8] பல்வேறு தொழில்களில் இருக்கும் தொழிலாளர்களைக் கொண்டு கூட்டமைப்புகளை உருவாக்கும் எண்ணம் கானிடம் தோன்றியது. [9] [10] வீட்டு அடிப்படை பெண் தொழிலாளர் கூட்டமைப்பு கூட்டங்களில் கலந்துகொள்ள பெண்களை ஊக்குவிக்கும் வகையில் இவர் தனது வீட்டுக்கு வீடு பிரச்சாரத்தைத் தொடங்கினார். [11] [12] கூட்டங்கள் வழக்கமான கலந்துரையாடல் வட்டங்களை உள்ளடக்கியிருந்தது. இறுதியில் பெண்களை அமைப்பின் பேரணிகளில் ஈடுபாட்டுடன் சேரச் செய்தது. [13] [14]
தொழிற்சங்கங்களின் உருவாக்கம் வளையல் தொழிலில் தொடங்கி படிப்படியாக ஆடைத் தொழிலை நோக்கி நகர்ந்தது. [15] [16] பின்னர் வீட்டு அடிப்படையிலான தொழிலாளர்களுக்காக ஒரு சட்டத்தை உருவாக்கும் நோக்கில் இவர் பணியாற்றத் தொடங்கினார், அதனால் கான் அவர்களுக்கான உறுப்பினர் வட்டங்களை உருவாக்கத் தொடங்கினார். [17] [18] கானின் பணி இறுதியில் சிந்து மற்றும் பலுசிசுதானில் தொழிற்சங்கங்களை உருவாக்க வழிவகுத்தது, இந்நிகழ்வு தெற்காசியாவில் முதல் முறையாகும். [19] [20] 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று வீட்டு அடிப்படையிலான பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பு நிறுவப்பட்டது.
கான் குடிமக்கள் சமூக குழுக்கள் மற்றும் சங்கங்களின் ஒரு பகுதியாகவும் உள்ளார். [21] [22] பெண் உரிமைகள், மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் சிறுபான்மை பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பேரணிகள் மற்றும் போராட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்று வரும் ஓர் ஆர்வலராக செயல்படுகிறார். [23] [24] [25] பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தொழிலாளர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கான் பணியாற்றியுள்ளார். [26] [27] [28]
மேற்கோள்கள்
தொகு- ↑ "School of Resistance - Episode Three: Distributing Dignity". HowlRound Theatre Commons (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ "Women, civil society groups announce separate rally on March 8". Pakistan News (in ஆங்கிலம்). Archived from the original on 2020-03-07. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ "HBWWF calls for implementing Sindh Home-Based Workers Act". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ "Perspectives: Home-based policy still distant dream for millions of workers in Pakistan". Law at the Margins (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-03-07. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ Equity, Roots for. "NEW SINDH POLICY ON HOME-BASED WORKERS LAUDED | Roots for Equity" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ "HBWWF demands practical implementation of SHBWA". Labour News International (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2020-11-01. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ "Minimum wages demanded for home-based workers". National Courier (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-10-21. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ emydemkess. "HBWWF". behindmycloset (in டச்சு). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ Hasan, Shazia (2020-11-12). "Sindh labour department signs MoU for home-based workers' registration". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ Glover, Simon. "Pakistani workers protest over jobs and pay". Ecotextile News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ "Nieuws - Pagina 221 van 1653". OneWorld (in டச்சு). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ HumanityHouse. "Feminist Zehra Khan's battle against the clothing industry". Humanity House (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ "We Have To Include Women To See A Change In Society - Zehra Khan Interview | Homenet South Asia". hnsa.org.in. Archived from the original on 2020-11-27. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ Shop, The Little Fair Trade. "Interviews - Home Based Women's Workers Federation (HBWWF), Karachi, Pakistan, (2011 & 2015) FAIR TRADE PAKISTAN SERIES". The Little Fair Trade Shop (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ ":: Labour Education Foundation ::". www.lef.org.pk. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ "HBWWF, Sindh Labour, Human Resource Depts Sign MoU To Start Registration". UrduPoint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ "HBWWF Demands Announcement Of Policy For Home Based Workers". Pakistan Point. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ "12m home-based workers go without legal identity in Pakistan". Daily Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-10-21. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ "Labourers stage protest over pending wages in Karachi". Daily Balochistan Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-04-18. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ "Pakistan: Massenentlassungen während der Covid-19-Pandemie". SOLIFONDS (in ஸ்விஸ் ஹை ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Supran, A. (2019-11-11). "Activists demand arrest of Pak Hindu student's killers". Samaj Weekly (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ pakobserver. "workplace harassment".
- ↑ "Activists demand arrest of Pak Hindu student's killers – British Asia News" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ admin (2020-03-06). "Civil society activists slam `hatred-based propaganda` against women – 6 March 2020". AGHS (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Activists demand arrest of Pak student's killers". The Siasat Daily (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2019-11-10. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ "Activists Demand Arrest Of Pak Hindu Student's Killers |". Ommcom News (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-10. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
- ↑ "Activists demand arrest of Pak Hindu student's killers". News24 English. 2019-11-10. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.[தொடர்பிழந்த இணைப்பு]