செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன்
செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன் சங்ககால மன்னர்களில் ஒருவன். நன்னன் என்னும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் பல்வேறு இடங்களில் இருந்துகொண்டு, பல்வேறு காவல்மர அடையாளங்களைக் கொண்டு பல்வேறு காலங்களில் தமிழ்நாட்டில் ஆட்சிபுரிந்து வந்தனர். அவர்களில் இந்த சேய் நன்னன் ஒருவன்.[1]
பெயர் விளக்கம்
தொகுசெங்கண்மா
தொகுசெங்கண்மா என்பது ஓர் ஊர். இங்கிருந்த வள்ளல் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன். இவன் மலைபடுகடாம் என்னும் நூலில் புலவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகன் என்பவரால் பாராட்டப் பட்டவன்.