செங்கலடி

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

செங்கலடி கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். ஆரம்ப காலத்தில் செங்கற் சூளைகள் பல அமையப்பெற்ற இடமாகக் காணப்பட்டமையினால் இப்பெயர் வந்திருக்கலாம் என்பது இவ்வூரின் வரலாற்றுச் செய்தியாகும். பெரும்பான்மையினராக இந்துக்களும் மற்றும் கிறித்துவர்கள், முஸ்லிம்கள் போன்ற மதத்தினர் தமிழ்மொழியினைப் பேச்சு மொழியாகக் கொண்டு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இவ்வூரில் மருத்துவமனை, வங்கிகள், பாடசாலை, தபாலகம், பிரதேசசெயலகம், போன்றவை உள்ளன.

செங்கலடி
City
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவு?
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கலடி&oldid=2943147" இலிருந்து மீள்விக்கப்பட்டது