செங்கியரைட்டு
செங்கியரைட்டு (Sengierite) என்பது Cu2(OH)2[UO2|VO4]2·6H2O.[1][2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஆக்சைடு மற்றும் ஐதராக்சைடு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. தாமிரமும் யுரேனைல் வனேடேட்டும் சேர்ந்து உருவான கனிமமாகக் கருதப்படுகிறது.
செங்கியரைட்டு Sengierite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | ஆக்சைடு மற்றும் ஐதராக்சைடு |
வேதி வாய்பாடு | Cu2(OH)2[UO2|VO4]2·6H2O |
இனங்காணல் | |
நிறம் | ஆலிவ் பச்சை, மஞ்சள் கலந்த பச்சை |
படிக இயல்பு | மெல்லிய தகடுகள், |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
பிளப்பு | சரிபிளவு {001} இல் |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 2.5 |
மிளிர்வு | விடாப்பிடியான பளபளப்பு |
கீற்றுவண்ணம் | இளம் பச்சை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 4.05 |
அடர்த்தி | 4.05 கி/செ,மீ3 (அளவிடப்பட்டது) 4.1 கி/செ,மீ3 (calculated) |
ஒளிவிலகல் எண் | nα = 1.760 – 1.770 nβ = 1.920 – 1.940 nγ = 1.940 – 1.970 |
பலதிசை வண்ணப்படிகமை | X: நீலப்பச்சை, Y: ஆலிவ் பச்சை, Z: மஞ்சள் பச்சை முதல் நிறமற்றது வரை |
2V கோணம் | அளக்கப்பட்டது: 37° to 39°, கணக்கிடப்பட்டது: 36° |
பிற சிறப்பியல்புகள் | கதிரியக்கம் |
காங்கோ மக்களாட்சிக் குடியரசில் உள்ள கடங்கா மாகாணத்தில் உள்ள உலுபும்பாசி நகரத்திற்கு வடக்கே 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் உள்ள லூயிசுவிசி சுரங்கத்தில் செங்கியரைட்டு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 1949 ஆம் ஆண்டில் இயோகன்னசு எஃப். வேசு மற்றும் பால் எஃப். கெர் ஆகியோரால் முதலில் விவரிக்கப்பட்டது. காங்கோவில் இருந்த சுரங்க நிறுவனத்தின் இயக்குநராக இருந்த எட்கர் செங்கியர் நினைவாக இந்த கனிமத்திற்கு செங்கியரைட்டு என்று பெயரிடப்பட்டது.
பன்னாட்டு கனிமவியல் நிறுவனம் செங்கியரைட்டு கனிமத்தை Sgi[3]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sengierite: Sengierite mineral information and data". mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2018-08-09.
- ↑ John W. Anthony, Richard A. Bideaux, Kenneth W. Bladh, and Monte C. Nichols, Eds., Handbook of Mineralogy, Mineralogical Society of America, Chantilly, VA 20151-1110, USA. PDF
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.
நூற்பட்டியல்
தொகு- Palache, P.; Berman H.; Frondel, C. (1960). "Dana's System of Mineralogy, Volume II: Halides, Nitrates, Borates, Carbonates, Sulfates, Phosphates, Arsenates, Tungstates, Molybdates, Etc. (Seventh Edition)" John Wiley and Sons, Inc., New York, pp. 1047–1048.