செங்குத்துப் பள்ளத்தாக்கு

செங்குத்துப் பள்ளத்தாக்கு என்பது புவியியல் அளவீடுகளில் வானிலை மற்றும் ஆற்றின் அரிப்பு செயல்பாட்டின் விளைவாக, மலைப்பகுதிகளின் பாறைகளுக்கு இடையில் ஏற்படும் ஆழமான பிளவு ஆகும்.[1]

ஐக்கிய அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் பாயும் கொலராடோ ஆறும், சின்னக் கொலராடா ஆறும் கலக்கும் இடத்தில் அமைந்த மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு

கடுமையான சூரிய வெப்பம் மற்றும் ஆற்று நீரால் ஏற்படும் மண் அரிப்பாலும் மலைகளுக்கு இடையே செங்குத்துப் பள்ளத்தாக்குகளை உருவாகும்.[2]குறிப்பாக மென்மையான சுண்ணாம்புக் கல் அல்லது மணற்கல் கொண்ட நிலப்பரப்பில் பாயும் ஒரு ஆறு அல்லது நீரோடைகள் நிலப்பரப்பை அரித்து இத்தகைய செங்குத்துப் பிளவுகளைச் செதுக்குகிறது.[3] இதற்கு எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு உள்ளது. மலைப்பகுதி பள்ளத்தாக்குகளுக்கு எடுத்துக்காட்டாக கலிபோர்னியாவின் யோசெமிட்டி பள்ளத்தாக்கு[4] உள்ளது.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Society, National Geographic (20 May 2011). "canyon". National Geographic Society (in ஆங்கிலம்).
  2. Ward Cameron (2005). "Understanding Canyon Formation". 2001-04-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-10-14 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "The Geology of the Grand Canyon". 2015-10-01 அன்று பார்க்கப்பட்டது.
  4. Yosemite Valley