செங்குந்தர் பொறியியல் கல்லூரி
நாமக்கல் மாவட்டத்தில், உள்ள பொறியியல் கல்லூரி
செங்குந்தர் பொறியியல் கல்லூரி (Sengunthar Engineering College) என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம், கொசவம்பாளையத்தில் அமைந்துள்ள ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது திருச்செங்கோட்டிலிருந்து 3 கி.மீ தொலைவிலும், நமக்கலில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
துவக்கம்
தொகுஇந்த கல்லூரியானது செங்குந்தர் அறக்கட்டறையால் 2001 இல் தொடங்கப்பட்டது. இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
வசதிகள்
தொகுநூலகம்
தொகுஇந்த கல்லூரி நூலகத்தில் 40,000 தொகுதிகளில், 9,200 தலைப்புகளில், 120 இந்திய இதழ்கள் மற்றும் 56 சர்வதேச பத்திரிகைகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கூட்டமைப்பின் 601 இயங்கலை பத்திரிகைகள் போன்றவற்றைக் கொண்டுள்ளன. இந்த நூலகத்தில் 1,400 க்கும் மேற்பட்ட குறுந்தகடுகள் மற்றும் நெகிழ்வுகளின் தொகுப்பு உள்ளது. பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு, வெளிநாட்டு மொழியாக ஆங்கிலத் தேர்வு, ஜிஆர்இ, மேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வு, பாதுகாப்பு சேவை மற்றும் இந்தியக் குடியியல் பணிகள் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கான பல புத்தகங்களும் குறிப்புதவிக்கும் எடுத்துச் சென்று படிக்கவும் கிடைக்கின்றன.