வெளிநாட்டு மொழியாக ஆங்கிலத் தேர்வு

டொஃபல் (TOEFL /ˈtfəl/ TOH-fəl) அல்லது முன்பு அறியப்பட்ட வெளிநாட்டு மொழியாக ஆங்கிலத் தேர்வு (Test Of English as a Foreign Language) என்பது கல்விசார் இடங்களில் ஒரு நபரின் ஆங்கில மொழிப் பயன்பாட்டையும் புரிந்து கொள்ளுதலையும் அறிந்து கொள்வதற்கான தேர்வு ஆகும். இத்தேர்வு கல்வித் தேர்ச்சி சேவையினால் (Educational Testing Service - ETS) வடிவமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றது. இது ஐக்கிய அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கல்வி பயில விரும்பும் ஆங்கில மொழியினை தாய் மொழியாகக் கொண்டிராதவர்களுக்கு ஆங்கில மொழித் திறமையை உறுதிப்படுத்தி சிக்கல்களை வெளிக்கொணர விரிவாக்கப்பட்டது. பின்னர் இது ஆங்கில மொழியினை தாய் மொழியாகக் கொண்டிராதவர்களுக்கு கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களின் அனுமதிக்கான நிபந்தனையாகியது. மேலும் பல நிறுவனங்கள் மற்றும் புலமைப் பரிசில் போன்றவற்றிற்கு இது தேவையான தேர்வாகக் காணப்படலாம். டொஃபல் கணிப்பெண்கள் இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாகும். அதன்பின் அவை செல்லுபடியற்றுப் போகும்.[5]

வெளிநாட்டு மொழியாக ஆங்கிலத் தேர்வு
TOEFL Logo.svg
சுருக்கம்டொஃபல்
வகைஇணையம் அல்லது எழுத்துத் தேர்வு அடிப்படை
நிருவாகிகல்வி மதிப்பீட்டுச் சேவை
மதிப்பிடப்பட்ட திறமைவாசித்தல், கேட்டல், பேச்சு, எழுத்து (ஆங்கிலம்)
நோக்கம்ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்டிராதவர்களுக்காக கல்வி மற்றும் ஏனைய தேவைகளுக்காக ஆங்கில மொழித் திறமையை மதிப்பிடல்
ஆரம்பிக்கப்பட்ட வருடம்1964 (1964)
காலம்இணையம் வழி மதிப்பீடு (iBT): 3 மணித்தியாலங்கள் 10 நிமிடங்கள் முதல் 4 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் (10 நிமிட இடைவேளை உட்பட).
எழுத்துத் தேர்வு மதிப்பீடு (PBT): 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் முதல் 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள்.[1]
தர அளவுiBT:
ஒவ்வொரு பிரிவுக்கும் 0 - 30. மொத்தம் 0 - 120.
PBT:
கேட்டல்: 31 - 68, கட்டமைப்பு: 31 - 69, வாசித்தல்: 31 - 67. மொத்தம் 310 - 677. எழுத்து (தனியாக): 0 - 6.
தர பெறுமதி2 வருடங்கள்
கொடுப்பனவுiBT: வருடத்திற்கு 50 மேல்.[2]
முயற்சி கட்டுப்பாடுiBT: 12 நாட்களில் ஒருதடவை.[3]
நாடு165 நாடுகளில் 4500 மதிப்பீட்டு நிலையங்கள்.[2]
மொழி(கள்)ஆங்கிலம்
வருடாந்த தேர்வுக்கு தேற்றுவோர்(?)
தேர்வு முறைஉத்தியோகபூர்வமாக இல்லை.
கட்டணம்iBT: $ 160 - $ 250, நாடுகளுக்கு ஏற்ப வேறுபடும்.[2]
PBT: US$ 160.[1]
தரம் பாவிக்கப்படுவது130க்கு மேற்பட்ட நாடுகளில் 9000 க்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், முகவர்கள், நிறுவனங்கள்.[4]
வலைத்தளம்www.ets.org/toefl

டொஃபல் - ஐஈஎல்டிஎஸ் பதிப்பெண்களின் தொடர்புதொகு

டொஃபல் மற்றும் ஐஈஎல்டிஎஸ் பதிப்பெண்கள் தொடர்பு[6]

ஐஈஎல்டிஎஸ் பதிப்பெண் டொஃபல் பதிப்பெண்
9 118-120
8.5 115-117
8 110-114
7.5 102-109
7 94-101
6.5 79-93
6 60-78
5.5 46-59
5 35-45
4.5 32-34
0-4 0-31

இவற்றையும் பார்க்கதொகு

உசாத்துணைதொகு

வெளியிணைப்புக்கள்தொகு