செங்குந்த கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
செங்குந்த கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்[1] தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், திருவல்லிக்கேணி ஜாம் பஜார் வட்டத்தில் செங்குந்த கோட்டம் என்னும் பகுதியில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.
செங்குந்த கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் | |
---|---|
பெயர் | |
வேறு பெயர்(கள்): | ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ் நாடு |
மாவட்டம்: | பாலக்காடு |
அமைவிடம்: | செங்குந்த கோட்டம் |
கோயில் தகவல் | |
மூலவர்: | சுப்பிரமணிய சுவாமி(முருகன்) |
தாயார்: | வள்ளி, தெய்வானை |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினாறாம் நூற்றாண்டு |
அமைத்தவர்: | செங்குந்தர் கைக்கோள முதலியார்[2] |
வரலாறு
தொகுஇக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோவில் செங்குந்தர் கைக்கோளர் மரபினர்களால் கட்டப்பட்டது.
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் முருகன் சன்னதியும், விநாயகர் உபசன்னதியும் உள்ளன. மேலும் செங்குந்த நவவீரர்கள் சிலையும் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. தை மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India, Volume 1.
- ↑ ஆறுமுகன் அருற்தலங்கள்
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத்". தமிழ் இணையக் கல்விக்கழகம்.
{{cite web}}
: External link in
(help)|publisher=