செசுபுரோனைட்டு
செசுபுரோனைட்டு (Cesbronite) என்பது Cu3Te6+O4(OH)4 (IMA 17-C) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். தாமிர-தெலூரியம் ஆக்சி உப்பு என்று இது வகைப்படுத்தப்படுகிறது. பச்சை நிறத்தில் காணப்படும் செசுபுரோனைட்டு கனிமத்தின் படிகங்கள் செஞ்சாய்சதுர இரட்டைக்கூர்நுனி வடிவத்தில் படிகமாகியுள்ளன. செசுபுரோனைட்டு கனிமத்தின் மோவின் அளவுகோல் கடினத்தன்மை மதிப்பு 3 என மதிப்பிடப்பட்டுள்ளது [2]. 1938 ஆம் ஆண்டில் பிறந்த பிரெஞ்சு கனிமவியலாளரான பேபியன் செசுபுரோன் நினைவாக கனிமத்திற்கு இப் பெயரிடப்பட்டது [3].
செசுபுரோனைட்டு Cesbronite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | தாமிர-தெலூரியம் ஆக்சி உப்பு |
வேதி வாய்பாடு | Cu3Te6+O4(OH)4 |
இனங்காணல் | |
நிறம் | பச்சை |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
பிளப்பு | {010} இல் குறைவு, {021} இல் நன்று |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 3 |
மிளிர்வு | சற்று விடாப்பிடியானது |
கீற்றுவண்ணம் | பச்சை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் |
ஒப்படர்த்தி | 4.45 (அளக்கப்பட்டது) |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.149 |
பலதிசை வண்ணப்படிகமை | தனித்துவம், பலவிதப் பச்சைகள் |
2V கோணம் | 72o (கணக்கிடப்பட்டது) |
புறவூதா ஒளிர்தல் | இல்லை |
கரைதிறன் | HCl மற்றும் HNO3 போன்றவற்றில் கரையும். நீரில் கரையாது. |
மேற்கோள்கள் | [1][2][3][4][1] |
தோற்றம்
தொகுமெக்சிகோ நாட்டின் சொனோரா மாகாணத்திலுள்ள பாம்போலிட்டா சுரங்கத்தில் முதன்முதலில் செசுபுரோனைட்டு கண்டறியப்பட்டது. அமெரிக்காவின் கோச்சைசு மாகாண டாம்சுடோன் மாவட்டம், அரிசோனா, கிழக்கு டிண்டிக் மலைகள், யுவாப் மாகாணம், யூட்டா போன்ற பிற பகுதிகளிலும் செசுபுரோனைட்டு கிடைக்கிறது [4]. பெரும்பாலும் எலக்ட்ரம் எனப்படும் தங்கத்தின் கலப்புலோகம், டெய்னியைட்டு, காரல்பிரைசைட்டு, சோகோம்கேட்லைட்டு, உடாகைட்டு, லெய்சிங்கைட்டு, யென்செனைட்டு, ஏமடைட்டு போன்ற கனிமங்களும் சேர்ந்து இயற்கையில் செசுபுரோனைட்டு காணப்படுகிறது[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Mineralienatlas
- ↑ Webmineral entry
- ↑ Williams, Sidney A. (1974). "Cesbronite, a new copper tellurite from Moctezuma, Sonora". Mineralogical Magazine 39. http://www.minersoc.org/pages/Archive-MM/Volume_39/39-307-744.pdf. பார்த்த நாள்: 2016-09-20.
- ↑ Mindat.org Cesbronite
- ↑ "Handbook of mineralogy" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-09-20.