செடிபுட்டா சேலை

செடிபுட்டா சேலை வகைகளைத் தமிழகத்தில் உள்ள சௌராஷ்டிரா சமூக மக்கள் விரும்பி அணிகின்றனர். காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் செயற்கைப் பட்டால் இந்த ஆடைகள் நெய்யப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளங்குளி, புதுக்குடி, வீரகநல்லூர், கிளாக்குளம் ஆகிய ஊர்களில் நெய்யப்படும் சேலைகளுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.[1]

வரலாறு

தொகு

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத் சோமநாதபுரம் பகுதியை மொகலாய மன்னனர்கள் கைப்பற்றிய காலத்தில் அவ்வூர் சௌராஷ்டிர மக்கள் மதுரைக்கு இடம் பெயர்ந்தனர்.

அப்போது மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் குடிபெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு கைத்தொழிலாக நெசவுத்தொழில் செய்து பிழைக்க வழிவகை செய்தார். மதுரையைத் தொடர்ந்து அந்த மக்கள் திண்டுக்கல், இராமநாதபுரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களிலும் குடியேறி நெசவுத்தொழில் செய்துவந்தனர்.

தெருக்களில் சுமார் 50 மீட்டர் நீளம் உள்ள பாவை ஓட்டி, அதில் 9 சேலைகள் வரை அவர்கள் நெசவு செய்கின்றனர். 75, 100, 120, 150-ஆம் எண் நூல்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

கூட்டுறவுச் சங்கங்களில் நெய்யப்படும் சேலைகள், தமிழ்நாடு கோ ஆப்டெகஸ் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. தனியாளர்களாக உற்பத்தி செய்வோர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி விற்கின்றனர். ஒரு காலத்தில் இலங்கைக்கும் அனுப்பப்பட்டது.

மேற்கோள்

தொகு
  1. தினமணி நாளிதழ் (6-8-2023) இணைப்பு "கொண்டாட்டம்" - பக்கம் 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=செடிபுட்டா_சேலை&oldid=3770300" இலிருந்து மீள்விக்கப்பட்டது