செட்டிகுளம் (பெரம்பலூர்)

செட்டிகுளம் (Chettikulum, Perambalur district) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி கிராமம் ஆகும்.[1] செட்டிகுளம் குன்னம் வட்டத்தில் அமைந்துள்ளது. இங்குப் புகழ்பெற்ற ஏகாம்பரேசுவரர் மற்றும் தண்டாயுதபாணி கோயில்கள் உள்ளன.

செட்டிகுளம்
Chettikulum
கிராமம்
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்பெரம்பலூர்
அலுவல்
 • மொழிகள்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
621104
வாகனப் பதிவுTN46
அருகில் உள்ள நகரம்பெரம்பலூர், தம்பிரான்பட்டி

மக்கள்தொகை தொகு

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி செட்டிகுளம் கிராமத்தில் 6231 மக்கள் வசிக்கின்றனர். இதில் 3127 பேர் ஆண்கள் மற்றும் 3104 பேர் பெண்கள். செட்டிகுளம் கிராமத்தின் பாலின விகிதம் 993 ஆகும். இது தமிழ்நாட்டின் மாநில சராசரியான 996ஐ விடக் குறைவு. செட்டிகுளம் கிராமம் தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ளது. 2011ஆம் ஆண்டில், செட்டிகுளம் கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 76.45% ஆக இருந்தது. இது தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதமான 80.09% விடக் குறைவு. செட்டிகுளத்தில் ஆண்களின் கல்வியறிவு 83.96% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 68.96% ஆகவும் உள்ளது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Panchyat Villages in Perambalur District". Perambalur District, India. பார்க்கப்பட்ட நாள் 30 March 2016.
  2. https://www.census2011.co.in/data/village/636278-chettikulam-tamil-nadu.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=செட்டிகுளம்_(பெரம்பலூர்)&oldid=3799626" இலிருந்து மீள்விக்கப்பட்டது