செட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவர் கோயில்
யோக ஹயக்கிரீவர் கோயில்[2][3][4] என்ற தேவநாதப் பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செட்டிபுண்ணியம் என்ற புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[5] 'ஹயம்' என்றால் 'குதிரை' மற்றும் 'க்ரீவம்' என்றால் 'கழுத்து'. உடம்பில் கழுத்து வரை குதிரை உருவம் கொண்ட தெய்வம் என்று ஹயக்கிரீவர் குறிப்பிடப்படுகிறார். மூலவராக வரதராஜ பெருமாள் வீற்றிருக்கும் இக்கோயிலில் ஸ்ரீஹேமாப்ஜவல்லி தாயார் அருள்பாலிக்கிறார்.
செட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 12°45′05″N 79°58′33″E / 12.751351°N 79.975905°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | காஞ்சிபுரம் மாவட்டம் |
அமைவிடம்: | செட்டிபுண்ணியம் |
சட்டமன்றத் தொகுதி: | செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 81 m (266 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | வரதராஜ பெருமாள் |
தாயார்: | ஸ்ரீஹேமாப்ஜவல்லி தாயார் |
சிறப்புத் திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராம நவமி, வைகாசி மகம் (பெருமாள் அவதரித்த நாள்), ஆடிப் பூரம் மற்றும் பங்குனி உத்திரம் |
உற்சவர்: | யோக ஹயக்ரீவர் என்ற தேவநாதப் பெருமாள் |
வரலாறு | |
கட்டிய நாள்: | சுமார் 500 ஆண்டுகள் பழைமையானது[1] |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 81 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள யோக ஹயக்ரீவர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 12°45′05″N 79°58′33″E / 12.751351°N 79.975905°E ஆகும்.
இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Hariprasath (2018-12-26). "கல்வியில் சிறக்க, தேர்வுகளில் அதிக மதிப்பெண் இங்கே சென்றால் பலன் உறுதி". Dheivegam. பார்க்கப்பட்ட நாள் 2023-07-28.
- ↑ மாலை மலர் (2016-05-14). "செட்டிபுண்ணியம் ஸ்ரீயோக ஹயக்ரீவர் கோவில்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-28.
- ↑ "VELUDHARAN's TEMPLES VISIT : Sri Varadharaja Perumal Temple / Sri Yoga Hayagrivar Temple / ஸ்ரீ யோக ஹயக்ரீவர் பெருமாள் கோயில், செட்டிபுண்ணியம், /Chettipunyam, Chengalpattu District, Tamil Nadu". VELUDHARAN's TEMPLES VISIT. 2021-12-06. பார்க்கப்பட்ட நாள் 2023-07-28.
- ↑ "Yoga Hyagreevar Perumal Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-28.
- ↑ "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-27.
- ↑ "Arulmigu Devanatha Perumal Temple , Chettipuniyam - 603204, Chengalpattu District [TM001844].,HAYAGRIVAR TEMPLE,VARADHARAJAR". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-27.